

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் கடந்த 3 நாட்களாக நடைபெற்ற வசந்தோற்சவம் நேற்று நிறைவடைந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
வருடாந்திர வசந்தோற்சவம் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியது. புதன்கிழமை தாயார் தங்க ரதத்தில் மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நிறைவு நாளான நேற்று, காலை உற்சவருக்கு பால், தயிர், மஞ்சள், குங்குமம் போன்றவற்றால் சிறப்பு திருமஞ்சன நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்களும் தேவஸ்தான அதிகாரிகளும் பங்கேற்றனர்.