Published : 28 May 2017 01:13 PM
Last Updated : 28 May 2017 01:13 PM

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வில் 99.6% எடுத்த நொய்டா மாணவி ரக்‌ஷா கோபால் முதலிடம்

சிபிஎஸ்இ பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில் 99.6% மதிப்பெண் பெற்று நொய்டா மாணவி ரக்‌ஷா கோபால் முதலிடம் பிடித்துள்ளார்.

சிபிஎஸ்இ பிளஸ் டூ தேர்ச்சி விகிதம் 83.05%-லிருந்து 82% ஆக குறைந்துள்ளது.

அதிக சதவீதம் எடுத்த மாணவர்கள் விவரம்:

ரக்‌ஷா கோபால்: அமிட்டி இண்டெர்னேஷனல், நொய்டா - 99.6%

பூமி சவந்த்: டிஏவி செக்டார், சண்டிகர் 8 - 99.4%

ஆதித்யா ஜெயின் பவன் வித்யா மந்திர், சண்டிகர் - 99.2%

சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வு கடந்த மார்ச் 9-ந்தேதி தொடங்கி, ஏப்ரல் 29-ந்தேதி முடிவடைந்தது. இந்தியா முழுவதும் 11 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினார்கள். தமிழகத்தில் மட்டும் 15 ஆயிரத்து 450 மாணவ-மாணவிகள் எழுதினார்கள்.தேர்வு முடிந்த நிலையில் எப்போது முடிவு வெளியாகும் என்று மாணவ-மாணவிகள் ஆர்வம் காட்டி வந்தனர். இந்தநிலையில் சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வு முடிவு இன்று இணையதளத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

மனிதவள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் முதல் 3 இடங்களில் வந்தவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x