ரூ.2,764 கோடியில் இ-கோர்ட் திட்டம்: செலவினங்கள் நிதிக் குழுவுக்கு சட்டத்துறை அமைச்சகம் கோரிக்கை

ரூ.2,764 கோடியில் இ-கோர்ட் திட்டம்: செலவினங்கள் நிதிக் குழுவுக்கு சட்டத்துறை அமைச்சகம் கோரிக்கை

Published on

‘இ கோர்ட்’ இரண்டாவது கட்டத் திட்டத்தை நிறைவேற்ற ரூ.2,764 கோடி தேவைப்படும் என்று மத்திய அரசின் செலவினங்கள் தொடர்பான நிதிக் குழுவிடம் சட்டத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நீதித்துறையில் தகவல் களை எளிமையான முறையில் அளிக்கவும், வெளிப்படைத் தன்மையை கடைப்பிடிக்கவும் வசதியாக ‘இ கோர்ட்’ திட்டத்தை சட்டத்துறை அமைச்சகம் செயல் படுத்தவுள்ளது.

அதன் ஒரு பகுதியாக வழக்கில் தொடர்புடையவர்கள், தங்கள் வழக்குகளின் நிலையையும், அது தொடர்பான நீதிமன்ற உத்தரவு களையும் தெரிந்து கொள்ள ஏ.டி.எம்.களைப் போன்று டச் ஸ்கிரீன் தொழில்நுட்பத்துடன் கணினிகளை நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளது.

நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப் படவுள்ள இந்த கணினி களுடன் பிரின்டர்களும் இணைக்கப்பட் டிருக்கும். வழக்கில் தொடர்புடைய வர்கள் தங்களுக்கு தேவையான தகவல்களை இதன் மூலம் பெற லாம். நீதிமன்ற வளாகத்திலும், சிறை வளாகத்திலும் வீடியோ கான்ஃபரன்சிங் வசதியை ஏற்படுத் தவும் சட்டத் துறை அமைச்சகம் திட்ட மிட்டுள்ளது. இதன் மூலம், வழக்கு விசாரணைக்காக சிறையி லிருந்து கைதிகளை நீதிமன்றத் துக்கு அழைத்துச் செல்ல வேண்டியதில்லை. சிறையிலிருந்த படியே அவர்களிடம் நீதிபதிகள் விசாரணையை நடத்த முடியும்.

அதே போன்று, நீதிமன்றங்களில் மின் தடை ஏற்படும்போது, அதனால் வழக்கு விசாரணை பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக சூரிய ஒளியில் மின்சாரத்தை தயாரித்து அளிக்கும் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும் திட்டமிடப் பட்டுள்ளது. முதல் கட்டமாக, இத்திட்டத்தை நாட்டில் உள்ள 5 சதவீத நீதிமன்றங்களில் செயல் படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த இ கோர்ட் இரண்டாம் கட்டத் திட்டத்துக்காக ரூ. 2,764 கோடி தேவைப்படும் என்று மத்திய அரசின் செலவினங்கள் தொடர்பான நிதிக் குழுவிடம் சட்டத்துறை அமைச் சகம் தெரிவித்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in