Published : 07 Nov 2014 11:43 AM
Last Updated : 07 Nov 2014 11:43 AM

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பூட்டான் பயணம்

பூட்டான் மன்னர் அழைப்பை ஏற்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி 2 நாள் சுற்றுப்பயணமாக பூட்டான் புறப்பட்டார்.

26 ஆண்டுகளுக்கு பிறகு பூட்டான் செல்லும் முதல் இந்திய குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜிதான்.

அவருடன் ரயில்வே அமைச்சர் மனோஜ் சின்ஹா, பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி உட்பட 4 நாடாளுமன்ற உறுப்பினர்களும் செல்கின்றனர். இந்த ஆண்டு ஜூன் மாதம் பிரதமர் நரேந்திர மோடி பூட்டான் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x