

மும்பை வருமான வரித்துறை ஆணையர் பி.பி.ராஜேந்திர பிரசாத் கார்ப்பரேட் குழுமம் ஒன்றுக்கு ஆதரவாகச் செயல்பட லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த குழுமத்துக்கு ஆதரவாகச் செயல்பட பிரசாத் சுமார் ரூ.19 லட்சம் வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டில் சிபிஐ அவருடன் 5 பேரைக் கைது செய்துள்ளது.
இதுகுறித்து சிபிஐ வட்டாரத்தில் கூறும்போது, ''பி.பி.ராஜேந்திர பிரசாத் மற்றும் ஒருவர் விசாகப்பட்டினத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்ற நால்வரும் மும்பையில் காவல் வைக்கப்பட்டுள்ளனர்.
முறைகேடாக ரூ.19 லட்சம் லஞ்சம் பெற்ற வழக்கில் பிரசாத் கைது செய்யப்பட்டுள்ளார். தேடுதல் வேட்டையில் சுமார் ரூ.1.5 கோடி பணம் கைப்பற்றப்பட்டது'' என்று தெரிவித்தனர்.