

இந்தியாவின் சிறந்த நண்பர் என கருதப்படுபவரும் ரஷ்ய தூதருமான அலெக்சாண் டர் கடக்கின் (67) உடல்நலக் குறைவு காரணமாக டெல்லி மருத்துவமனையில் நேற்று உயிரிழந்தார்.
கடந்த 2009-ம் ஆண்டு முதல் இந்தியாவுக்கான ரஷ்ய தூதராக அலெக்சாண் டர் பணியாற்றி வந்தார். இதற்கு முன்பு கடந்த 1999 முதல் 2004-ம் ஆண்டு வரையிலும் அவர் இந்தப் பதவியை வகித்தார். இதன் மூலம் இரு நாடுகளுக் கிடையிலான உறவு குறிப் பிடத்தக்க வகையில் மேம் பாடு அடைய இவர் முக்கியப் பங்கு வகித்துள்ளார்.
சரளமாக இந்தி மொழி பேசக்கூடிய அலெக்சாண்டர், இந்தியாவை மிகவும் நேசித் தார். இவர் கடந்த 1971-ல் இந்தியாவில் உள்ள ரஷ்ய தூதரகத்தில் அதிகாரியாக தனது பணியை தொடங் கினார். இவரது மறைவு குறித்து பிரதமர் மோடி ட்விட்டரில் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “அலெக்சாண்டர் மறைவுச் செய்தி கேட்டு மிகவும் மன வருத்தம் அடைந்தேன். இந் தியா-ரஷ்யா இடையே உறவு மேம்பட இவர் அய ராது பாடுபட்டுள்ளார்” என கூறியுள்ளார்.