Last Updated : 18 Aug, 2016 07:31 AM

 

Published : 18 Aug 2016 07:31 AM
Last Updated : 18 Aug 2016 07:31 AM

நீதிபதிகள் நியமன வரைவு திட்டம்: நிபந்தனைகளை தளர்த்த மத்திய அரசு முடிவு

கொலீஜியம் முறையை மேம்படுத் தும் வரைவு திட்டத்தில், அதிக பட்சமாக 3 பேரை மட்டுமே பரிந் துரைக்கலாம் என்ற நிபந்தனையை மத்திய அரசு தளர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், பரிந்துரை செய்யப்படும் நீதிபதிகளின் பெயரை நிராகரிக்கும் உரிமையை தக்கவைத்துக் கொள்வதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.

உச்ச நீதிமன்றம் மற்றும் நாடு முழுவதும் உள்ள 24 உயர்நீதி மன்றங்களுக்கு புதிய நீதிபதிகளை நியமிக்க ‘கொலீஜியம்’ நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. இதன் படி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட 4 மூத்த நீதிபதி கள் குழு இந்த பரிந்துரையை மேற்கொண்டு வருகிறது. இந்த நடைமுறையில் குறைகள் இருப்ப தால், இதற்கு மாற்றாக தேசிய நீதிபதிகள் நியமனச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இச்சட் டத்தை செல்லாது என்று அறிவித்த உச்ச நீதிமன்றம், ‘கொலீஜியம்’ நடைமுறையை மேம்படுத்த வரை வுத் திட்டம் ஒன்றை தயாரிக்கும் பொறுப்பை மத்திய அரசிடம் ஒப் படைத்தது. மத்திய அரசு சார்பில் வரைவுத் திட்டம் தயாரிக்கப்பட்டு, அதன் பிரதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூ ருக்கு கடந்த மார்ச் மாதம் அனுப்பி வைக்கப்பட்டது.

நியமனம் நிறுத்திவைப்பு

அதில் கூறப்பட்டிருந்த சில நிபந்தனைகளை கொலீஜியம் நிராகரித்தது. இதையடுத்து கொலீஜியம் முறையில் நியமிக் கப்பட்ட நீதிபதிகளின் பெயர்களை மத்திய அரசு நிறுத்தி வைத்துள் ளது. இதனால், நீதித்துறை நியமனம் ஸ்தம்பித்துள்ளது. இதுகுறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், மத்திய அரசுக்கு கடந்தவாரம் கடும் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், வரைவு திட்டத்தில் கொலீஜியத்தின் கருத்துகள் சிலவற்றை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளதாக மத்திய சட்டத் துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னர் தாக்கல் செய்யப்பட்ட வரைவுத் திட்டத்தில் அதிகபட்ச மாக 3 வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகளின் பெயர்களை மட்டுமே கொலீஜியம் பரிந்துரைக்க முடியும் என்று கூறப்பட்டிருந்தது. இதற்கு நீதித்துறை தரப்பில் எதிர்ப்பு தெரி வித்ததையடுத்து, புதிய வரைவுத் திட்டத்தில் இந்த நிபந்தனை தளர்த்தப்பட்டுள்ளது. நீதிபதிகள் நியமனத்துக்கு தகுதி மற்றும் பணிமூப்பு ஆகியவை அடிப்படை தகுதியாக கருதப்படும் என்று முன்பு கூறப்பட்டிருந்தது. புதிய வரைவுத் திட்டத்தில் ‘பணிமூப்பு’ அடிப்படை தகுதியாக கருதப்படும் என்று மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.

நிராகரிக்கும் உரிமை

ஆனால் பரிந்துரை செய்யப் படும் பெயர்களை நிராகரிக்கும் உரிமை மத்திய அரசுக்கு இருக்கும் என்ற அம்சத்தை மத்திய அரசு புதிய வரைவுத் திட்டத்திலும் உறுதி செய்துள்ளது. ‘தேசப் பாது காப்பு’ மற்றும் ‘பொதுநலன்’ கருதி, பரிந்துரைக்கப்படும் பெயர் களை மத்திய அரசு நிராகரிக்கலாம் என்று மத்திய அரசு மீண்டும் தெரிவித்துள்ளது. நிராகரிக்கப் பட்ட பெயர்களை கொலீஜியம் மீண்டும் அனுப்ப முடியும் என்ற நடைமுறையை மத்திய அரசு அனுமதிக்கவில்லை. தற்போது புதிய வரைவுத் திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட பெயர்களை மத்திய அரசு ஏன் நிராகரித்தது என்ற காரணத்தை கொலீஜியத்துக்கு மத்திய அரசு தெரிவிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

மத்திய அரசின் முடிவில் உள்ள இந்த மாற்றங்களை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளுமா எனக் கேள்வி எழுந்துள்ளது. வரை வுத் திட்டம் குறித்து இருதரப்பிலும் உடன்பாடு ஏற்பட்டால் மட்டுமே நீதிபதிகள் நியமனத்தில் உள்ள சிக்கல் தீரும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x