Published : 11 May 2015 10:11 AM
Last Updated : 11 May 2015 10:11 AM

நிகழ்நேரப் பதிவு: ஜெயலலிதா வழக்கின் தீர்ப்பு

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உட்பட 4 பேரையும் விடுவித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்

நாடு முழுவதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் இன்று காலை 11 மணிக்கு தீர்ப்பு வழங்கியது.

சொத்துக்குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுவித்து கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி சி.ஆர்.குமாரசாமி தீர்ப்பு வழங்கினார்.இது தொடர்பான விரிவான செய்திக்கு> | சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை |

919 பக்க தீர்ப்பில், ஜெ. விடுதலைக்கு முக்கியக் காரணங்களைச் சொல்லும் அம்சங்கள்:

சொத்துக் குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுதலை செய்யப்படுவதற்கு உரிமை உடையவரே, அவரது வருவாய்க்கு அதிகமாக சேர்த்த சொத்தின் மதிப்பு 10%-க்கும் குறைவாகவே உள்ளது என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது. | முழுமையாக படிக்க ->ஜெயலலிதா விடுதலை சாத்தியம் ஆனது எப்படி?- 919 பக்க தீர்ப்பில் புரிதலுக்கு உதவும் 'எண்கள்' |

(நிகழ்நேரப் பதிவு நிறைவு)

15.50 PM: சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டுள்ளதையடுத்து நாடாளுமன்ற வளாகத்தில் அதிமுக எம்.பி.க்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். >| ஜெ. விடுதலை: நாடாளுமன்ற வளாகத்தில் அதிமுக எம்.பி.க்கள் கொண்டாட்டம் |

15.40 PM: சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். >| அடுத்தது என்ன?- ஜெயலலிதா முக்கிய ஆலோசனை |

15.30 PM: கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு முழு எழுத்து வடிவம் - ஆங்கிலத்தில் - >Text of Karnataka High Court's verdict on Jayalalithaa DA case

15.20 PM: இந்திய அரசியலில் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக ஜெயலலிதா விளங்கக்கூடும் என்று காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் கூறியுள்ளார். > | ஜெயலலிதா இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக முடியும்: தமிழருவி மணியன் |

15.00 PM: ஜனநாயக நாட்டில் வழக்குகளில் இத்தகைய திருப்பங்கள் ஏற்படுவது சகஜமே. இது ஒன்றும் இயல்புக்கு புறம்பானது அல்ல என பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். >| நம் நாட்டில் வழக்குகளின் திருப்பங்கள் சகஜமே: சுப்பிரமணியன் சுவாமி கருத்து |

14.40 PM: #JayaVerdict என்ற ஹேஷ்டேக் பிற்பகல் வரை இந்திய அளவில்தான் ட்ரெண்டிங்கில் முதலிடம் வகித்தது. தீர்ப்பு வழங்கிய பின்னர், தொடர்ந்து குறும்பதிவுகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியதன் பலனாக, 2.30 மணியளவில் உலக அளவில் இந்த ஹேஷ்டேக் முதலிடம் பிடித்தது. >| ஜெயலலிதா வழக்கின் தீர்ப்பு: ட்விட்டரில் தொடர்ந்து முதன்மை |

14.35 PM: சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் கூறும்போது, "தீர்ப்பை தீர்ப்பாக மட்டுமே பார்க்க வேண்டுமே தவிர, இதனை அரசியலாக்கக் கூடாது” என்று தெரிவித்தார்.

14.20 PM: சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டிருப்பது நீதிமன்றங்கள் மீதான மக்கள் நம்பிக்கையை கேள்விக்குறியாக்கியுள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். >| நீதிமன்றங்கள் மீதான மக்கள் நம்பிக்கை கேள்விக்குறி ஆகியுள்ளது: திருமாவளவன் |

13.58 PM: சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்பால் தன் மீது சுமத்தப்பட்ட அவதூறி நீக்கப்பட்டதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். >| தர்மத்துக்கும் நேர்மைக்கும் இறுதி வெற்றி: ஜெயலலிதா |

13. 50 PM: சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக தலைவர் கருணாநிதி, இது இறுதி தீர்ப்பு அல்ல என்று குறிப்பிட்டுள்ளார். >| ஜெயலலிதா விடுதலை: கருணாநிதி கருத்து |

13.42 PM: சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டிருந்தாலும் வரும் தேர்தலில் மக்கள் அவரை தோற்கடிக்க வேண்டும். ஊழலுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் தொடர்வார்கள் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

13.20 PM: சொத்துக் குவிப்பு வழக்கில், அரசியல் கட்சிகள் எதிர்பார்ப்புக்கு மாறாக தீர்ப்பு வந்துள்ளது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன கருத்து தெரிவித்துள்ளார். >| எதிர்பார்ப்புக்கு மாறான ஜெ. தீர்ப்பு: தமிழிசை கருத்து |

13.10 PM: சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதை ஒட்டி இன்று மாலை 5 மணியளவில் திரைப்பட வர்த்தக சம்மேளனத்தின் சார்பில் வெற்றிக் கொண்டாட்டம் நடத்தப்படுகிறது.

12. 50 PM: புதுச்சேரியில் அதிமுக அலுவலகம் முன் திரண்ட தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டனர். அப்போது, புதுச்சேரி அதிமுக எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் மகிழ்ச்சியில் நடனமாடியதை அங்கிருந்த தொண்டர்கள் வெகுவாக ரசித்தனர்.

வீடியோ பதிவு: