

சோலார் பேனல் மோசடி வழக்கு விசாரணையில் ஆஜராகாத சரிதா நாயரை கைது செய்ய விசாரணை ஆணையம் வாரன்ட் பிறப்பித் துள்ளது.
கேரளாவில் சோலார் பேனல் பதிக்கும் நிறுவனத்தை பிஜு ராதாகிருஷ்ணன் என்பவருடன் சேர்ந்து தொடங்கியவர் சரிதா நாயர். இதில் கோடிக்கணக்கில் மோசடி நடந்ததாக புகார் எழுந்தது.
மேலும், காங்கிரஸ் முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி, முன்னாள் அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு மோசடியில் பங்கிருப்பதாக சரிதா நாயர் பகிரங்கமாக புகார் கூறினார். இந்த மோசடி குறித்து நீதிபதி சிவராஜன் தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
சரிதா நாயரிடம் ஒருமுறை விசாரணை நடத்தப்பட்டது. அதன்பிறகு விசாரணையில் அவர் ஆஜராகவில்லை. பலமுறை எச்சரித்தும் விசாரணைக்கு சரிதா நாயர் வரவில்லை. இதையடுத்து சரிதா நாயரை கைது செய்ய விசாரணை ஆணையம் நேற்று ஜாமீனில் வெளிவரமுடியாதபடி கைது வாரன்ட் பிறப்பித்தது.
‘‘வரும் 27-ம் தேதி ஆணையத்தின் முன்பு சரிதா நாயர் ஆஜராக வேண்டும். தவறினால் அவரை கைது செய்ய வேண்டும்’’ என்று ஆணையம் உத்தரவிட்டுள்ளது.