

உத்தரப் பிரதேச சட்டப்பேர வைக்கு நாளை இறுதிக்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இதை யொட்டி ஜவுன்பூர் மாவட்டத்தில் சமாஜ்வாதி சார்பில் நேற்று நடந்த இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் அகிலேஷ் யாதவ் பேசியதாவது:
தீபாவளி மற்றும் ஹோலி பண்டிகையைவிட ரம்ஜான் பண்டிகை அன்று மாநில அரசு அதிக அளவில் மின்சாரம் விநி யோகம் செய்ததாக பிரதமர் மோடி குற்றம் சாட்டி உள்ளார். இதன் மூலம் அவர் இந்து-முஸ்லிம் பிரச் சினைக்கு தூபம் போடுகிறார். நமது அரசு பாரபட்சமாக நடந்து கொள்ளவில்லை. இதுதொடர்பாக அரசு வெளியிட்ட புள்ளி விவரம் இதை உறுதிப்படுத்தி உள்ளது.
பிரதமர் மோடி டெல்லியில் தங்கியிருக்க விரும்பாமல் உத்தரப் பிரதேசத்தில் தங்க விரும்பினால், அவர் இடத்தை பரிமாற்றம் செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.