Published : 22 Oct 2016 09:22 am

Updated : 15 Jun 2017 19:08 pm

 

Published : 22 Oct 2016 09:22 AM
Last Updated : 15 Jun 2017 07:08 PM

எல்லையில் 7 பாகிஸ்தான் வீரர்கள் சுட்டுக்கொலை

7

ஜம்மு காஷ்மீர் மாநிலம், கதுவா மாவட்ட சர்வதேச எல்லைப் பகுதி யில் தொடர்ந்து 4-வது நாளாக நேற்று பாகிஸ்தான் படைகள் அத்துமீறி தாக்குதல் நடத்தின. இந்தியத் தரப்பில் நடத்தப்பட்ட பதில் தாக்குதலில் 7 பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் 1 தீவிரவாதி கொல்லப்பட்டனர்.

கதுவா மாவட்டத்தில் பிஎஸ்எப் வீரர்கள் நேற்று முன்தினம் பெரிய அளவிலான ஊடுருவல் முயற்சியை முறியடித்தனர். இதில் 6 தீவிரவாதிகள் பாகிஸ்தான் எல்லைக்குள் தப்பியோடினர்.

இந்நிலையில் இதே மாவட்டத் தின் ஹிரா நகர் செக்டார், பாபியா பகுதி, சர்வதேச எல்லைப் பகுதியில் இந்திய நிலைகள் மீது நேற்று காலை 9.35 மணியளவில் பாகிஸ்தான் படைகள் தாக்குதல் நடத்தின. சிறிய மற்றும் தானியங்கி ஆயுதங்கள், 82 மி.மீ. பீரங்கி குண்டுகள் மூலம் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் 15 நிமிடங்கள் நீடித்தது. இதில் குர்னாம் சிங் என்ற பிஎஸ்எப் வீரர் படுகாயம் அடைந்தார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இதற்கு பதிலடியாக பிஎஸ்எப் வீரர்கள் ஆக்ரோஷ தாக்குதல் நடத்தினர். இதில் பாகிஸ்தான் வீரர்கள் 7 பேரும் தீவிரவாதி ஒருவரும் கொல்லப்பட்டதாக பிஎஸ்எப் தெரிவித்துள்ளது.

ரஜவுரி மாவட்டம், பிம்பர் காலி செக்டார், எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் நேற்று முன்தினம் பாகிஸ்தான் வீரர்கள் பீரங்கி குண்டுகளை வீசி கடும் தாக்குதல் நடத்தினர்.

இந்திய ராணுவத்தின் துல்லியத் தாக்குதலுக்குப் பிறகு சர்வதேச எல்லை மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சண்டை நிறுத்த உடன்பாட்டை மீறி இதுவரை 31 முறை பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது.

ஊடுருவல் முறியடிப்பு

இதனிடையே வடக்கு காஷ்மீர், பாரமுல்லா மாவட்டத்தில் தீவிர வாதிகள் நடமாட்டம் குறித்த தகவலின் பேரில், இம்மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு படையினர் நேற்று முன்தினம் இரவு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இங்கு கடந்த 17-ம் தேதி 700-க்கும் மேற்பட்ட வீடுகள் சோதனை யிடப்பட்டதில் தீவிரவாத செயல்கள் தொடர்பாக 44 பேர் கைது செய்யப் பட்டனர். முதல்முறையாக சீன கொடிகளுடன், பெட்ரோல் குண்டு கள், பாகிஸ்தான் கொடிகள், தீவிரவாத அமைப்புகளின் லெட்டர் பேடுகள், தேச விரோத விளம்பர தகவல்கள் உள்ளிட்டவற்றை கைப்பற்றினர்.

இதற்கிடையில் ஜம்மு பிராந் தியத்தின் பூஞ்ச் செக்டார், எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் அடர்ந்த வனப் பகுதியில் 2-3 தீவிரவாதிகள் நேற்று காலையில் ஆயுதங்களுடன் ஊடுருவ முயன் றனர். இவர்களை ராணுவ வீரர்கள் விரட்டியடித்தனர்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

எல்லைபாகிஸ்தான் வீரர்கள்அத்துமீறல்சுட்டுக்கொலை

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author