

இஷ்ரத் ஜஹான் தீவிரவாதி என்பதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
கடந்த 2004 ஜூன் 15-ல் இளம் பெண் இஷ்ரத் ஜஹான் உட்பட 4 பேர் குஜராத் போலீஸாரால் என்கவுன்ட்டர் மூலம் கொல்லப் பட்டனர். அவர்கள் 4 பேரும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் என்றும் அன்றைய குஜராத் முதல்வர் மோடியை கொலை செய்ய திட்டமிட்டிருந்தனர் என்றும் மாநில போலீஸார் குற்றம் சாட்டினர்.
ஆனால் அப்போதைய மத்திய அரசு, இது போலி என்கவுன்ட்டர் என்று நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது.
இதுகுறித்து ப.சிதம்பரம் நேற்று கூறியதாவது:
இஷ்ரத் ஜஹான் தீவிரவாதி என்பதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை. அகமதாபாத் பெருநகர் நீதிமன்ற நீதிபதி தமாங் தனது அறிக்கையில், இஷ்ரத் என் கவுன்ட்டர் போலியானது என்று குறிப்பிட்டுள்ளார்.
சிறப்பு புலனாய்வுக் குழு, சிபிஐ நடத்திய விசாரணையிலும் என் கவுன்ட்டர் போலியானது என்பது உறுதி செய்யப்பட்டது. 2 அல்லது 3 நாட்களுக்கு முன்னரே 4 பேரும் போலீஸ் கட்டுப்பாட்டில் இருந் துள்ளனர். அவர்கள் காரில் இருந்த போது போலீஸார் சுட்டுக் கொன்று 2.06 லட்சம் பணத்தை உடல்கள் மேலே பரப்பியுள்ளனர். இவை அனைத்தும் நீதிபதியின் அறிக்கை யில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இவ் வாறு அவர் தெரிவித்தார்.