

நாட்டிலேயே முதன்முறையாக சிக் கிம் மாநில அரசு சார்பில் வெளிப் படையான அரசு தகவல்இணை யதளம் தொடங்கப்பட்டுள்ளது.
அரசு அல்லது அரசின் கட்டுப் பாட்டில் உள்ள நிறுவனங்கள் சேக ரிக்கும் தகவல்கள் இந்த இணைய தளத்தில் இடம்பெறும். இதை பொது மக்கள் இலவசமாக பயன்படுத்திக் கொள்வதுடன் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
sikkim.data.gov.in என்ற பெயரி லான இந்த இணையதளத்தை மக்களவை உறுப்பினர் பி.டி.ராய் நேற்று தொடங்கி வைத்தார். இதுபோன்ற இணையதளத்தை மாநில அரசு தொடங்கி இருப்பது இதுவே முதல்முறை என்று மாநில தகவல் தொழில்நுட்பத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் ராய் பேசும் போது, “தகவல் தொழில்நுட்பத் துறை, சிக்கிம் மாநில அரசு மற்றும் டெல்லியைச் சேர்ந்த என்ஐசி குழு வினரின் இந்த முயற்சி பாராட்டுக் குரியது” என்றார்.