Last Updated : 26 Nov, 2014 10:07 AM

 

Published : 26 Nov 2014 10:07 AM
Last Updated : 26 Nov 2014 10:07 AM

டிவி 9 சேனலுக்கு கர்நாடகத்தில் தடை: அமைச்சருக்கு எதிராக செய்தி வெளியிட்டதால் நடவடிக்கை?

கர்நாடக‌த்தில் 'டிவி 9' (கன்னடம்), 'நியூஸ் 9' ஆகிய சேனல்களின் ஒளிபரப்பை கேபிள் ஆபரேட்டர்கள் நிறுத்தியுள்ளனர்.

கர்நாடகத்தில் 'டிவி 9' (கன்னடம்), ஆங்கில செய்தி சேனலான 'நியூஸ் 9' ஆகிய இரு சேனல்களின் ஒளிபரப்பு கடந்த திங்கள்கிழமை மாலை முதல் நிறுத்தப்பட்டது.

இதற்கு கர்நாடக அரசும், மின்சாரத்துறை அமைச்சர் டி.கே.சிவகுமாரும்தான் காரணம் என தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக 'டிவி 9' சேனல் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கர்நாடக மின்சாரத்துறை அமைச்சர் டி.கே.சிவகுமார் சட்ட விரோதமாக‌ கிரானைட் தொழிலில் ஈடுபட்டுவருகிறார்.

மின்சாரத்துறை தொடர்பாக ஒப்பந்தம் கோரியதில் கோடிக் கணக்கில் ஊழல் புரிந்துள்ளார். கடந்த மக்களவைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு ஆயிரக்கணக் கில் பணம் கொடுத்தார். இதனை எல்லாம் எங்களுடைய சேனலில் செய்தியாக வெளியிட்டோம்.

இதனால் ஆத்திரம் அடைந்த சிவகுமார் கடந்த சில தினங்களுக்கு முன்பு கர்நாடக கேபிள் டிவி ஆபரேட்டர்களை அழைத்து பேசியுள்ளார்.

அப்போது டிவி 9 சேனலை ஒளிபரப்பக் கூடாது என வாய்மொழி உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து கடந்த திங்கள்கிழமை மாலை முதல் டிவி 9 குழும சேனல்கள் கர்நாடகத்தில் தடை செய்யப்பட்டுள்ளன.இந்த விவகாரத்தில் கர்நாடக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

இது ஊடக உரிமையை பறிக் கும் செயல் என்று மதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவர் தேவகவுடா, கர்நாடக‌ பாஜக தலைவர் பிரஹ லாத் ஜோஷி, எதிர்க்கட்சித் தலை வர் ஜெகதீஷ் ஷெட்டர், மனித உரிமை ஆர்வலர்கள் ஆகியோர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே கர்நாடக கேபிள் டிவி சங்கத் தலைவர் பத்ரிக் ராஜூ கூறும்போது, “டிவி 9 சேனலின் ஒளிபரப்பை நிறுத்துமாறு அமைச்சர் டி.கே.சிவகுமார் கூறவில்லை. இவ்விவகாரத் துக்கும் அரசுக்கும் எந்தவிதமான தொடர்புமில்லை. அந்த சேனல் ஆபாச செய்திகளை வெளியிடு கிறது. கன்னடர்கள் நலனுக்காக எதையும் செய்யவில்லை. கேபிள் டிவி ஆபரேட்டர்களின் செலவினத் தைக் குறைக்கும் வகையில் அந்த சேனல் ஒளிபரப்பை நிறுத்தியுள்ளோம்” என்றார்.

இச்செய்தி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதைத் தொடர்ந்து, கேபிள் டிவி ஆபரேட் டர்கள், சேனல் நிர்வாகத்தினரை அழைத்து அரசுத் தரப்பில் பேச்சு நடத்தப்பட்டதாகவும், விரைவில் சேனல் ஒளிபரப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x