இலங்கைப் படுகொலை சம்பவம் காங்கிரஸுக்கும் பங்குண்டு - இல. கணேசன் திடீர் பாயச்சல்

இலங்கைப் படுகொலை சம்பவம் காங்கிரஸுக்கும் பங்குண்டு - இல. கணேசன் திடீர் பாயச்சல்
Updated on
1 min read

இலங்கைத் தமிழர் படுகொலையில் காங்கிரஸுக்கும் பங்கு உண்டு என தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் இல. கணேசன் கருத்து தெரிவித்தார்.

காமன்வெல்த் மாநாடு குறித்த தமிழர்களின் கருத்தை தனது கட்சித் தலைமைக்கு உணர்த்த டெல்லிக்கு வியாழக்கிழமை வந்த அவர் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது:

‘இலங்கைக்கு நிதி மட்டுமல்ல: போர்ப் பயிற்சியும் மத்திய அரசு தந்தது. தார்மிக ஆதரவும் தந்தது. இவ்வளவும் செய்துவிட்டு ராஜபக்சேவை கண்டிக்க காங்கிரசுக்கு தகுதி இல்லை" என்றார் அவர்.

"பாஜகவின் ஒருசில தலைவர்கள், ’பிரதமர் போனல் என்ன?’ என்று கூறியது அவர்களுடைய தனிப்பட்ட கருத்து என்றும், மத்திய தலைமை இது பற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை" எனவும் அவர் தெரிவித்தார்.

"காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது என நாம் ஆரம்பத்திலிருந்தே சொல்லி வருகிறோம். காரணம், அதை நடத்துவதற்கென நிர்ணயிக்கப்பட்டுள்ள 7 தகுதிகளில் ஒன்று கூட இலங்கைக்கு கிடையாது’ என்றார் இல. கணேசன்.

இலங்கைக்கு நாடாளுமன்றக் குழுவுடன் சுஷ்மா சென்று திரும்பிய பின் ஆதரவாக பேசினாரே என்று நிருபர் ஒருவர் கேட்டபோது, ‘தற்போது நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின், நிலைமை மாறி விட்டது’ என்றார்.

இவருடன் தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், மூத்த தலைவரான லட்சுமணன் ஆகியோரும் டெல்லி வந்திருந்தனர். காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்வதை எதிர்க்க வேண்டும் என ராஜ்நாத் சிங் மற்றும் சுஷ்மா ஸ்வராஜை நேரில் சந்தித்து அவர்கள் வலியுறுத்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in