Published : 01 Nov 2014 08:31 AM
Last Updated : 01 Nov 2014 08:31 AM

கர்ப்பத்தில் உள்ள சிசுவுக்கு இதய அறுவை சிகிச்சை: நாட்டிலேயே முதல் முறையாக ஹைதராபாத்தில் மருத்துவ சாதனை

நாட்டிலேயே முதன்முறையாக தாயின் வயிற்றில் வளரும் 26 வார சிசுவுக்கு இதய அறுவை சிகிச்சை செய்து ஹைதராபாத்தில் உள்ள ‘கேர்’ தனியார் மருத்துவ குழுவினர் அரிய சாதனையை படைத்துள்ளனர்.

ரங்காரெட்டி மாவட்டம், இஞ்சாபூர் பகுதியை சேர்ந்தவர் அருண். இவரது மனைவி சிரிஷா (25) . இவர் ஒரு தனியார் பள்ளியில் அறிவியல் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சிரிஷா கர்பம் தரித்தார். தற்போது 6 மாத கர்ப்பிணியான இவர் ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் குழந்தையின் வளர்ச்சி குறித்து அறிய ஸ்கேனிங் செய்தார். அப்போது குழந்தை யின் இதயத்தில் இடது பாகத்தில் உள்ள ரத்த குழாயில் சரிவர ரத்தம் செல்லாமல் அடிக்கடி அடைப்படுவது தெரியவந்தது.

இதனால் சிரிஷா ஹைதராபாத்தில் உள்ள ‘கேர்’ தனியார் மருத்துவமனைக்கு சென்று மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார். அதில் குழந்தைக்கு இதயத் தின் இடது பாகத்தில் உள்ள ரத்தநாளத்தில் (வால்வ்) பிரச்சினை இருப்பது தெரிய வந்தது. அந்த நாளத்துக்கு ரத்தம் சரிவர செல்லவில்லை என தெரிய வந்தது.

இது குறித்து அருணுக்கும், சிரிஷா விற்கும் தெரியப்படுத்திய மருத்து வர்கள், சிசுவின் 26-வது வாரத்தில்தான் அரிய சிகிச்சை மேற்கொள்ள முடியும் என்றும், இதனால் தாய்-சேய் இருவருக்கும் எந்த வித ஆபத்தும் இல்லை என்றும் தெரிவித் தனர். ஆனால், குழந்தை பிறந்த பின்னர், குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை செய்வது கடினம் என்றும் அறிவுறித்தினர்.

சிரிஷா ஒரு அறிவியல் ஆசிரியை என்பதால் இந்த பிரச்சினையை எளிதில் புரிந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து நேற்று முன் தினம் அவருக்கு டாக்டர் நாகேஸ்வர ராவ் தலைமையில் 12 பேர் கொண்ட மருத்துவர்கள் குழு அறுவை சிகிச்சை செய்தது. நாட்டிலேயே முதன் முதலாக கர்ப்பத்தில் உள்ள சிசுவுக்கு இதய அறுவை சிகிச்சை செய்வது இதுவே முதன்முறையாகும்.

முதலில் தாய்க்கும், பின்னர் சிசுவுக்கும் மயக்க மருந்து செலுத்தப்பட்டது. பின்னர் சிறிய ஊசியை தாயின் அடிவயிற்றில் அல்ட்ரா சவுண்ட்டின் உதவியுடன் செலுத்தி, பின்னர் இதனை குழந்தையின் தொடையில் (இண்ட்ரோ மஸ்குலார் முறையில்) செலுத்தினர். பின்னர் இதற்காக தயாரிக்கப்பட்ட பலூனின் உதவியுடன் வெடிக்க செய்தனர். இதனால் சிசுவின் ரத்த நாளங்கள் 60 சதவீதம் நன்றாக இயங்கின. இந்த அரிய சிகிச்சைக்கு பின்னர் தாயும்-சேயும் நலமாக உள்ளதாக மருத்துவ குழுவினர் தெரிவித்தனர்.

குழந்தை பிறந்து வளரும் போது, நாளடைவில் பாதிக்கப்பட்ட வால்வு முழு அளவில் செயல்படத் தொடங்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சிகிச்சைக்கான முழு செலவையும் கேர் மருத்துவமனையே ஏற்றது. மேலும் குழந்தை பிறப்புக்கான முழு செலவையும் இந்த மருத்துவ மனையே ஏற்க உள்ளதாக டாக்டர் ராவ் தெரிவித்தார்.

தாயின் கர்ப்பத்திலேயே மறு ஜன்மம் எடுத்துள்ள தங்களது குழந்தையை காப் பாற்றிய மருத்துவர்களை சிரிஷாவும், அவரது கணவர் அருணும் வெகுவாக பாராட்டியதோடு கண்கள் கலங்க நன்றியை தெரிவித்து கொண்டனர்.

இந்த அரிய சிகிச்சைக்கு பின்னர் சிசுவின் ரத்த நாளங்கள் 60% நன்றாக இயங்கின. தாயும்-சேயும் நலமாக உள்ளதாக மருத்துவ குழுவினர் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x