Published : 12 Mar 2017 09:09 am

Updated : 16 Jun 2017 13:46 pm

 

Published : 12 Mar 2017 09:09 AM
Last Updated : 16 Jun 2017 01:46 PM

பாஜகவுக்கு இது பெரிய வெற்றி: ராஜ்நாத் சிங் பெருமிதம்

உ.பி., உத்தராகண்ட் மாநிலங் களில் பாஜக பெற்றிருப்பது வெற்றி அல்ல, மிகப்பெரிய வெற்றி என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “இது வெற்றி அல்ல. மிகப்பெரிய வெற்றி. உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தராகண்ட்டில் வெற்றியின் புதிய உச்சத்தை பாஜக தொட்டுள்ளது. இதன்மூலம் நாட்டின் அரசியல் வரலாற்றை பாஜக மாற்றி அமைத்துள்ளது.

பாஜகவின் இந்த வெற்றி, பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்களிடையே காணப்படும் நம்பகத்தன்மைக்கும் அவரது தலைமைப் பண்புக்கும், சிறந்த நிர்வாகத்தை அளிப்பதில் கட்சியின் உறுதிப்பாட்டுக்கும் கிடைத்த வெற்றியாகும்.

பாஜக தேதிய தலைவர் அமித்ஷாவின் நிர்வாகத் திறன் மற்றும் தொண்டர்களின் கடின உழைப்பே இந்த வெற்றிக்கு காரணம் ஆகும். எங்களுக்கு வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை வழங்கிய உ.பி. மற்றும் உத்தரா கண்ட் மக்களுக்கு நன்றி கூறுகிறோம்” என்றார்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

பாஜகஇது பெரிய வெற்றிராஜ்நாத் சிங் பெருமிதம்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author