ஆப்கானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறினால் இந்தியாவை தீவிரவாதிகள் குறிவைக்க வாய்ப்பு

ஆப்கானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறினால் இந்தியாவை தீவிரவாதிகள் குறிவைக்க வாய்ப்பு
Updated on
1 min read

ஆப்கானிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறினால் தீவிரவாதிகள் தங்கள் தாக்குதலை இந்தியா மேல் திருப்ப நிறைய வாய்ப்புகள் இருப்பதாக மைக்கேல் கியூகெல்மேன் என்ற அரசியல் நிபுணர் தெரிவித்துள்ளார்.

இந்திய-அமெரிக்க-பாகிஸ்தான் உறவுகள் பற்றி குளோபல் இந்தியா அறக்கட்டளை கொல்கத்தாவில் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் கியூகெல்மேன் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும், பாகிஸ்தான் ராணுவம், தீவிரவாத அமைப்புகளுடன் உறவுகளை வைத்திருக்கும் வரை இந்தியா-பாகிஸ்தான் நல்லுறவு சாத்தியமில்லை என்கிறார் அவர்.

"ஆப்கானை விட்டு அமெரிக்க படைகள் வெளியேறினால் தெற்காசியாவில் இந்தியா-பாகிஸ்தான் பற்றிய செய்திகளே அதிகம் இடம்பெறும். தற்போது அயல்நாட்டுப் படைகளை எதிர்த்துப் போராடி வரும் ஆப்கான் தீவிரவாதிகள் தங்கள் கவனத்தை இந்தியா பக்கமே திருப்புவார்கள்.

குறிப்பாக லஸ்கர்-இ-தாய்பா நிச்சயம் இந்தியாவை மீண்டும் குறிவைக்கும். மேலும் கடந்த சில மாதங்களில் இந்தியாவுக்கு எதிராக மேலும் சில தீவிரவாதக் குழுக்கள் கிளம்பியுள்ளன. எனவே இந்த இருநாடுகளின் அரசியல் எதார்த்தங்கள் சுட்டுவது என்னவெனில் இருநாடுகளும் சமாதானம் செய்து கொள்ள வாய்ப்பேயில்லை என்றே நான் கருதுகிறேன்.

பாகிஸ்தானில் இந்தியா விவகாரங்கள் குறித்த கொள்கை முடிவுகள் ராணுவத்திடம் உள்ளன. ஆகவே சமாதானத்திற்கு அவர்கள் லேசில் வழிவிடமாட்டார்கள்.

மாறாக, தற்போதைய இந்திய அரசு, பாகிஸ்தானுடன் உரையாடத் தயாராக இருந்தாலும் பாகிஸ்தான் தவறாக நடந்து கொண்டால் வேடிக்கை பார்க்கும் அரசும் அல்ல. பாகிஸ்தான் நிச்சயம் இந்தியாவை தூண்டும் விதமாகவே நடந்து கொள்ளும் என்று நம்பலாம்.

ஆனால், இந்திய-அமெரிக்க உறவுகள் மேலும் பலப்படவே வாய்புள்ளது. பலம் பெறும்.” என்று கூறியுள்ளார் அவர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in