

பெங்களூருவில் உள்ள பொம்மசந்திராவைச் சேர்ந்தவர் னிவாஸ் பிரசாத் (எ) கட்டகனள்ளி வாசு (38). பாஜகவை சேர்ந்த இவர் கடந்த உள்ளாட்சி தேர்தலில் பாஜக சார்பில் பொம்மசந்திராவில் போட்டியிட்டு வெற்றிப்பெற்றார். ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஆனேக்கல் கிளை செயலாளராகவும் இருந்தார். இவரது மனைவி ரேணுகா ஆனேக்கல் நகர சபையின் தலைவராகவும் உள்ளார்.
இந்நிலையில் ஸ்ரீனிவாஸ் பிர சாத் நேற்று அதிகாலை 5.30 மணி அளவில் பொம்மசந்திராவில் இருந்து ஓசூருக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது காரை வழி மறித்த மர்ம நபர்கள் சிலர், னிவாஸ் பிரசாத்தை வெளியே வருமாறு மிரட்டினர். இதையடுத்து வெளியே வந்த னிவாஸ் பிரசாத்தை மர்ம நபர்கள் கத்தியால் குத்தி படுகொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர்.
விரைந்து வந்த ஹெப்பகுடி போலீஸார், ஸ்ரீநிவாஸ் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக் காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பெங்களூரு ஊரக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வினித் சிங் கூறும்போது, ‘‘கொலை வழக்கு பதிவு செய்து குற்ற வாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்துள்ளோம். அரசியல் விரோதமா? தனிப்பட்ட காரணமா? என்ற கோணத்திலும் விசாரித்து வருகிறோம்’’ என்றார்.
இதற்கிடையே, ஸ்ரீநிவாஸ் படுகொலையை கண்டித்து பாஜகவினர் ஆனேக்கலில் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பெங்களூரு ஓசூர் சாலையில் 2 மணி நேரம் வரை போக்குவரத்து பாதித்தது. பின்னர் போலீஸார் தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர்.