மேற்கு வங்காளத்துக்கு மாறும் அசாருதீன்

மேற்கு வங்காளத்துக்கு மாறும் அசாருதீன்
Updated on
1 min read

உ.பி.யின் முராதாபாத்தின் காங்கிரஸ் எம்.பி.யான முகமது அசாருதீன் மேற்கு வங்காளத்தில் போட்டியிட விரும்புகிறார்.

முன்னாள் கிரிக்கெட் வீரரும், ‘மேட்ச் பிக்சிங்’கில் சிக்கியவருமான அசாருதீன் 2009 தேர்தலில் திடீர் என காங்கிரசில் இணைந்தார். இவர் எளிதாக ஜெயிக்கும் வகையில் உபியில் முஸ்லீம் வாக்காளர்கள் அதிகம் கொண்ட முராதாபாத் ஒதுக்கப்பட்டது. இங்கு 49,107 வாக்குகளில் பாரதிய ஜனதா வேட்பாளரை வென்றவர், பின் தொகுதிக்காக எதுவுமே செய்யவில்லை என புகார் எழுந்தது.

இதனால், அங்கு மீண்டும் போட்டியிட்டால் தோற்று விடுவோம் எனப் பயந்த அசாருதீன், மேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத்தில் போட்டியிட திட்டமிட்டார். முஸ்லிம் வாக்காளர்கள் அதிகம் உள்ள தொகுதியான இது, காங்கிரஸின் எம்பியாக இருக்கும் அப்துல் மன்னான் உசைனுக்கு மீண்டும் ஒதுக்கப்பட்டு விட்டது.

இது குறித்து அசாருதீனின் டெல்லி நண்பர்கள் வட்டாரம் தி இந்துவிடம் கூறுகையில், ‘வேறு சீட்டுகளில் போட்டியிட்டால் வெற்றி உறுதி இல்லை என்பதால், முர்ஷிதாபாத்திலேயே போட்டி யிட வேண்டி கட்சி மாறவும் அசாருத்தீன் தயாராகி விட்டார். இதற்காக, அவர் திரிணாமுல் காங்கிரஸின் தலைவர்களிடம் பேசி வருகிறார்.’ எனத் தெரிவிக்கின்றனர்.

மம்தாவிடம், டெல்லி ஜாமியா மசூதியின் ஷாஹி இமாம், அசாருத்தீனுக்காக சிபாரிசு செய்ததாகவும், இதனால், அவர் நம்பிக்கையுடன் காத்திருப்பதா கவும் அந்த நண்பர்கள் கூறுகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in