டெல்லியில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விபத்து: 2 பேர் பலி

டெல்லியில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விபத்து: 2 பேர் பலி
Updated on
1 min read

வடக்கு டெல்லியில், பாரா இந்து ராவ் பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டடம் ஒன்று இன்று காலை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் தந்தை, மகன் பலியாகினர்.

சம்பவ இடத்துக்கு 6 தீயணைப்பு வாகனங்கள் விரைந்துள்ளன. இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

விபத்துக்குள்ளான அடுக்குமாடி கட்டடம் 150 ஆண்டுகள் பழமையானது என கூறப்படுகிறது. மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in