

அசாம் பாஜக மூத்த தலைவரின் மகனை உல்பா தீவிரவாதிகள் கடத்திச் சென்றுள்ளனர். அவரை விடுவிக்க ரூ.1 கோடி கேட்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.
அசாமில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. அந்த மாநில பாஜகவின் மூத்த தலைவராக ரத்னேஸ்வர் மோரன் உள்ளார். அவரது மகன் குல்தீப். கடந்த 1-ம் தேதி அருணாச்சல பிரதேசம் நாம்பாங்கில் தங்கியிருந்த குல்தீப்பை உல்பா தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர்.
துப்பாக்கி ஏந்திய 5 தீவிரவாதிகளின் நடுவில் நின்று குல்தீப் பேசும் வீடியோவை உல்பா அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில் தனது உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது, பணயத் தொகையை கொடுத்து தன்னை மீட்குமாறு முதல்வருக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.