

பல்துறை தொழில் நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக் கான வங்கக் கடல் நாடுகளின் (பிம்ஸ்டெக்) உச்சி மாநாடு மியான்மர் தலைநகர் நைப்பியதாவில் செவ்வாய்க் கிழமை தொடங்குகிறது. 2 நாள் நடைபெறும் இந்த மாநாட்டில் பங்கேற்பதற் காக பிரதமர் மன்மோகன் சிங் திங்கள்கிழமை நைப்பியதா வந்து சேர்ந்தார். 2 ஆண்டுகளுக்குப் பிறகு மியான்மர் வரும் அவருடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனனும் வந்துள்ளார்.
வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், வெளியுறவுத்துறை செயலாளர் சுஜாதா சிங் ஆகியோர் ஏற்கெனவே மியான்மர் வந்துள்ள நிலையில் அவர்களும் இம்மாநாட்டில் பங்கேற்கின்றனர்.
இந்தியா, இலங்கை, வங்காளதேசம், நேபாளம், பூடான், தாய்லாந்து, மியான்மர் ஆகிய 7 நாடுகளின் தலைவர்கள் இம்மாநாட் டில் பங்கேற்கின்றனர். இந்நிலையில் இலங்கை அதிபர் ராஜபக்சே, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா உள்ளிட்டோரை மன்மோகன் சந்தித்துப் பேசுவார் என்று கூறப்படுகிறது. - பி.டி.ஐ.