பார்மரில் பாஜக வேட்பாளர் மனு தாக்கல்

பார்மரில் பாஜக வேட்பாளர் மனு தாக்கல்
Updated on
1 min read

ராஜஸ்தான் மாநிலம், பார்மரில் பாஜக சார்பில் சோனாராம் சவுத்ரி செவ்வாய்க்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்த சோனாராம் சவுத்ரி, கடந்த வாரம்தான் அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார். முதல்வர் வசுந்தரா ராஜேயின் ஆதரவுடன், பார்மர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு பெற்றுள்ளார்.

இத்தொகுதியை தனக்கு ஒதுக்கீடு செய்யும்படி பாஜக மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங் விடுத்த வேண்டுகோளை பாஜக நிராகரித்துவிட்டதைத் தொடர்ந்து, அவர் சுயேச்சையாக களமிறங்கி உள்ளார். இந்நிலையில், பார்மர் ஆட்சியர் அலுவலகத்திற்கு தனது ஆதரவாளர்களுடன் செவ்வாய்க் கிழமை வந்த சோனாராம் சவுத்ரி, அந்த மாவட்டத்தின் ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான பானு பிரகாஷிடம் மனு தாக்கல் செய்தார்.

பின்னர் சோனாராம் சவுத்ரி செய்தியாளர்களிடம் கூறியதாவது: “கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு ஜஸ்வந்த் சிங்கை சந்தித்துப் பேசினேன். அப்போது, எந்த தொகுதியில் போட்டியிடுவது என்பது குறித்து தான் இன்னமும் முடிவு செய்யவில்லை என்று தெரிவித்தார். சமீப காலமாக அவருடன் தொலைபேசியிலோ, நேரிலோ தொடர்பு கொள்ளவே இல்லை” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in