ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: கலாநிதி, தயாநிதி மாறன் மனு தள்ளுபடி

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: கலாநிதி, தயாநிதி மாறன் மனு தள்ளுபடி
Updated on
1 min read

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கை டெல்லி சிபிஐ நீதிமன்றம் விசாரித்து வருகிறது. அந்த நீதிமன்றத்தில் ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு விசாரணையும் நடைபெறுகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரர் கலாநிதி மாறன் ஆகியோர் சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். ‘ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு தனிப்பட்ட விவகாரம், அதை 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்குடன் சேர்த்து விசாரிக்கக்கூடாது’ என்று அவர்கள் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி ஓ.பி. ஷைனி, ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்குடன் சேர்த்தே விசாரிக்கப்படும் என்று தீர்ப்பளித் தார். இதுதொடர்பாக மாறன் சகோ தரர்கள் தாக்கல் செய்த மனுவை அவர் தள்ளுபடி செய்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in