

பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கும்போது, இந்தியா வில் நிலவும் மத சகிப்பின்மை, மனித உரிமை மீறல் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்புமாறு அந்நாட்டு நாடாளுமன்ற கீழவை சபாநாயகர் பால் ரயனை 18 உறுப்பினர்கள் அடங்கிய குழு வலியுறுத்தி இருந்தது.
அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் பராக் ஒபாமா மற்றும் தொழிலதி பர்களை சந்தித்துப் பேசினார். ஒபாமாவுடனான பேச்சுவார்த்தை யின்போது, இந்தியாவில் நிலவும் மத சகிப்பின்மை மற்றும் அது தொடர்பான வன்முறை, சிறுபான்மையினர் மீதான மனித உரிமை மீறல் மற்றும் குடிமை சமூக அமைப்புகள் மீதான கட்டுப்பாடுகள் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதாக அந்நாட்டு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித் துள்ளார்.
எனினும் இதுதொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் எஸ்.ஜெயசங்கரிடம் கேள்வி எழுப்பியபோது, “இல்லை, மனித உரிமை மீறல் பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தையில் இடம்பெற்றதாக நான் கருதவில்லை” என்றார்.
இதனிடையே, அந்நாட்டு நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் மோடி உரையாற்றினார். முன்ன தாக, அமெரிக்க நாடாளு மன்றத்தின் பிரதிநிதிகள் சபையின் 18 உறுப்பினர்கள், சபாநாயகர் பால் ரயனுக்கு கடிதம் எழுதி உள்ளனர். அதில், மோடியை சந்தித்து பேசும்போது, இந்தியா வில் மத சுதந்திரத்துக்கு ஏற்பட் டுள்ள அச்சுறுத்தல் பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று பால் ரயனைக் கேட்டுக் கொண்டனர்.
குடியரசு கட்சியின் டிரென்ட் பிராங்க்ஸ் மற்றும் ஜனநாயகக் கட்சியின் பெட்டி மெக்கல்லம் தலைமையிலான இந்தக் குழுவினர் எழுதி உள்ள கடிதத்தில், “இந்தியாவில் வசிக்கும் முஸ்லிம், கிறிஸ்தவம், பவுத்தம், சீக்கியம் உள்ளிட்ட மதங்களைச் சேர்ந்த சிறுபான்மையினர் பல ஆண்டுகளாக துன்புறுத்தலுக்கும் தாக்குதலுக்கும் உள்ளாகி வருகின்றனர். வேறு வழியின்றி இவர்கள் வன்முறையான சூழ்நிலையை சகித்துக் கொண்டு தொடர்ந்து வாழ்ந்து வருகின்றனர். அதேநேரம் வன்முறைக்குக் காரணமானவர்கள் தண்டனை யிலிருந்து தப்பி விடும் சூழல் நிலவி வருகிறது.
இரு நாடுகளுக்கிடையிலான உறவு வலுவடைந்து வரும் நிலையில், மத சுதந்திரத்தை நிலைநாட்ட வேண்டியது அவசியம். எனவே, இதுபோன்ற செயலில் தொடர்ந்து ஈடுபடுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மோடியிடம் வலியுறுத்த வேண்டும்” என கூறப்பட்டிருந்தது.
மதசகிப்பின்மை
இரு நாட்டு தலைவர்கள் சந்திப்பின்போது தீவிரவாத செயல்கள் அதிகரித்து வருவது குறித்து விவாதித்தபோது, இந்தியா வில் நிலவும் மதசகிப்பின்மை குறித்த பிரச்சினை பற்றி விவாதித்ததாக அந்நாட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் மோடியும் ஒபாமாவும் பேச்சுவார்த்தை நடத்தி முடித்த நிலையில், இந்தியாவில் நிகழும் மனித உரிமை மீறல், அடிப்படை சுதந்திரத்துக்கான சவால்கள் உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர் பான விசாரணையை அமெரிக்க நாடாளுமன்றத்தின் டாம் லான் டோஸ் மனித உரிமை ஆணையம் தொடங்கியது.
மனித உரிமை ஆணைய துணைத்தலைவர் ஜேம்ஸ் பி.மெக்கவர்ன் கூறும்போது, “அரசியல் சட்ட ரீதியாக பாதுகாப்பு இருந்தாலும், இந்தியாவில் வசிக்கும் சீக்கியர்கள் உள்ளிட்ட மத சிறுபான்மையினர் இந்து தேசியவாத குழுவினரின் வன்முறைகளையும், துன்புறுத் தலையும் சந்தித்து வருகின்றனர். ஆனால் வன்முறையை கட்டவிழ்த்து விடுபவர்கள் தண்டனையிலிருந்து தப்பி விடும் நிலை தொடர்கதையாக உள்ளது. மாநில அளவிலான மதமாற்ற தடைச் சட்டம், இந்து மதத்தி லிருந்து மாறுவது சட்டபூர்வ மானதா என்பதை மட்டுமே அரசு அதிகாரிகள் கவனிக்க வழி வகுக்கிறது. மதத்தைத் தேர்ந் தெடுப்பது ஒரு தனிப்பட்ட செயல், இது அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கக் கூடாது” என்றார்.
மதமாற்ற தடைச் சட்டம்
மனித உரிமை ஆணையத்தின் முன்பு சாட்சியாக ஆஜராகி வாக்குமூலம் அளித்த இந்திய-அமெரிக்க முஸ்லிம் கவுன்சிலின் முசாதிக் தாங்கே கூறும்போது, “முக்கிய நபர்களுக்கு ட்விட்டர் மூலம் தவறாமல் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் பிரதமர், 5 தேவாலயங்கள் மற்றும் கிறிஸ்தவ பள்ளி மீதான தாக்குதல் பற்றி கருத்து தெரிவிக்க மாதக் கணக்காகிறது. அப்படி கருத்து கூறினாலும் அது முழுமையான கண்டனமாக இருப்பதில்லை. மதமாற்ற தடைச் சட்டம் இந்து மதத்திலிருந்து மாறுவதன் மீது மட்டுமே கவனம் செலுத்துகிறது, இந்து மதத்திற்கு மாற்றம் செய்வதன் மீது கவனம் செலுத்துவதில்லை” என்றார்.