உ.பி. பள்ளிகளில் 10-ம் வகுப்பு தேர்வில் மோசடி: விடைகளை பார்த்து எழுதிய மாணவிகள்

உ.பி. பள்ளிகளில் 10-ம் வகுப்பு தேர்வில் மோசடி: விடைகளை பார்த்து எழுதிய மாணவிகள்
Updated on
1 min read

உத்தரபிரதேசத்தில் நடந்த 10-ம் வகுப்பு கணித தேர்வில் மாணவியர்கள் மொத்தமாக சேர்ந்து ஒருவருக்கொருவர் விடை எழுதியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தின் பாலியா வில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு கணித தேர்வு நேற்று நடந்து கொண்டிருந்தது. அப்போது தேர்வு எழுதிக் கொண்டிருந்த மாணவிகள் திடீரென தங்களது இருக்கையை விட்டு எழுந்து வந்து புத்தகத்தை பார்த்தும், பிற மாணவிகள் எழுதிய விடைத்தாளைப் பார்த்தும் விடை எழுதினர். ஒரு சிலர் தேர்வு அறைக்கு வெளியே வந்து தங்களது கணித நோட்டுகளை புரட்டிப் பார்த்து விடை எழுதினர்.

இந்த காட்சிகள் தேர்வு அறை யில் வைக்கப்பட்டிருந்த கேமரா வில் அப்படியே பதிவாகியுள்ளன. மதுராவில் இருக்கும் ராதா கோபால் உயர்நிலை பள்ளியிலும் இதேபோன்ற மோசடி சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்த பள்ளியின் தேர்வு அறைக்குள் நுழைந்த மாபியா கும்பல் ஒன்று, மாணவ, மாணவிகளிடம் பிட்டு காகிதங்களைக் கொடுத்துவிட்டுச் சென்றது. இரு பள்ளிகளிலும் நடந்த இந்த தேர்வு மோசடி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு நடந்த பொதுத் தேர்வின் போதும் மதுராவில் உள்ள ஒரு பள்ளியில் இத்தகைய மோசடி நடந்தது. இதில் மிகவும் புகழ்பெற்ற சம்பவம் 2015-ல் பிஹாரின் வைஷாலி மாவட்டத்தில் நடந்தது. அங்குள்ள ஒரு பள்ளியில் தேர்வு நடந்து கொண்டிருந்தபோது, மாணவ, மாணவிகளின் பெற்றோர், நண்பர் கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பள்ளியின் சுற்றுச்சுவர் மீது ஏறி, ஜன்னல்கள் வழியாக விடைக்கான பிட்டு காகிதங்களை வழங்கி கொண்டிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in