Published : 26 Jan 2014 09:59 AM
Last Updated : 26 Jan 2014 09:59 AM

‘மின் கட்டணத்தை குறைக்காவிட்டால் தீக்குளிப்பேன்’: காங்கிரஸ் எம்.பி எச்சரிக்கை

மும்பையில் மின் கட்டணத்தை குறைக்காவிட்டால் தீக்குளிப்பேன் என்று காங்கிரஸ் எம்.பி. சஞ்சய் நிருபம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தனது கோரிக்கையை வலியுறுத்தி மும்பையில் உள்ள ரிலையன்ஸ் இன்ஃப்ரா ஸ்ட்ரக்சர் அலுவலகத்துக்கு அருகே கடந்த மூன்று நாள்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் சஞ்சய் நிருபம் ஈடுபட்டு வருகிறார். அவர் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: எனது கோரிக்கை ஏற்கப்படா விட்டால், ரிலைய ன்ஸ் அனில் திருபாய் அம்பானி குழுமத்தின் தலைவர் அனில் அம்பானியின் வீட்டின் முன் தீக்குளிப்பேன்.

மும்பையின் மின் விநியோகத்தில் ஈடுபடும் நிறுவனங்களில் கணக்கு தணிக்கை மேற்கொள்ள முதல்வர் பிருதிவிராஜ் சவாண் உத்தரவிடவேண்டும்” என்றார்.

இதற்கிடையே மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் அஜித் பவார் கூறுகையில், “இந்த விவகாரம் தொடர்பாக ஜனவரி 29-ம் தேதி நடைபெறும் மாநில அமைச்சரவை கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும்” என்றார். சமீபத்தில் மும்பை நீங்கலாக மாநிலத்தின் பிற பகுதிகளில் மட்டும் 20 சதவீத மின் கட்டண குறைப்புக்கு மாநில அரசு ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x