Last Updated : 03 Oct, 2013 06:08 PM

 

Published : 03 Oct 2013 06:08 PM
Last Updated : 03 Oct 2013 06:08 PM

பிரதமர்களால் அவதிக்குள்ளான குடியரசு தலைவர்கள்

மன்மோகன் சிங் மீது விமர்சகர்கள் தொடர்ந்து முன்வைக்கும் வாதம், அவர் தனது அதிகாரத்தை உறுதியுடன் நிலைநாட்டுவதில்லை என்பதுதான். அவர்களுக்கு தெரியாது, பிரதமர் போன்ற மிக உயரிய பதவிக்கு நற்பண்புகளை உடையவர்தான் தேவையே தவிர, அடாவடிக்காரர் அல்ல. அதோடு, பிரதமரை கடுமையாக விமர்சிப்பவர்கள், அவரின் பதவியையும் சேர்த்தே விமர்சிக்கிறார்கள் என்றே நாம் பொருள் கொள்ள வேண்டும்.

இதில் முரண்பாடு என்ன வென்றால், முந்தைய காலங்களில் குடியரசுத் தலைவரின் பெருமையை குலைக்கும் வகையில் பிரதமர்கள் சிலரின் செயல்கள் இருந்துள்ளன. 1975-ம் ஆண்டு அவசர நிலையை பிரகடனப்படுத்தும் ஆவணத்தில் அன்றைய குடியரசுத் தலைவர் ஃபக்ருதீன் அலி அகமது கையெழுத்திட்டார். அவர் கையெழுத்திட்டபோது, குளிய லறையில் குளித்துக் கொண்டி ருந்தாராம். குளியல் தொட்டியில் இருந்த நிலையிலேயே, அவரிடம் அவசர அவசரமாக கையெழுத்து வாங்கப்பட்டதாக ஒரு செவிவழித் தகவல் உண்டு.

ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த போது, குடியரசுத் தலைவர் கியானி ஜெயில் சிங்கை அறிவற்ற பள்ளிச் சிறுவன் என்று தனது நட்பு வட்டத்தில் விமர்சித்தாராம்.

மன்மோகன் சிங் மட்டும் எந்தவிதத்தில் குறைச்சல் எனக் கூறும் வகையில் 2005-ம் ஆண்டு ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அப்போதைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், ரஷ்யா தலைநகர் மாஸ்கோவுக்குச் சென்றிருந்த போது, அவர் தாயகம் திரும்பும் வரை கூட காத்திருக்காமல், பிகார் சட்டப்பேரவையை கலைப்பது தொடர்பான ஆவணத்தில் கையெ ழுத்து பெறப்பட்டது. அதுவும் எப்போது? நள்ளிரவில்.

ஆனால், இதற்கெல்லாம் சேர்த்து, சந்தர்ப்பம் கிடைக்கும் போது, குடியரசுத் தலைவர்களும் தங்களின் அதிகாரத்தை வெளிப் படுத்தியிருக்கின்றனர். 1987-ம் ஆண்டு ராஜீவ் காந்தி ஆட்சியை கலைத்துவிடுவேன் என பகிரங்க மாக மிரட்டல் விடுத்தார் ஜெயில் சிங். எம்.பி.க்கள் லாப நோக்குடன் இரு பதவிகளில் இருந்தால், பதவியை இழப்பார்கள் என்ற சட்டத்தால் சோனியா காந்திக்கு பாதிப்பு ஏற்பட்டபோது, அதைத் தடுப்பதற்காக 2006-ம் ஆண்டு புதிய சட்டம் கொண்டு வரப்பட்டது. அந்தச் சட்டத்தில் கையெழுத்திட்டு ஒப்புதல் அளிக்காமல், திருப்பி அனுப்பினார் அப்துல் கலாம்.

குடியரசுத் தலைவரோ, பிரதமரோ, யாராக இருந்தாலும் சட்டத்தை மதித்தும், கண்ணி யத்தைக் காப்பாற்றும் வகையிலும் நடந்து கொண்டால்தான் நாட்டுக்குப் பெருமை. மேலே கூறப்பட்ட சம்பவங்களிலிருந்து நமக்கு கிடைக்கும் பாடம் அதுதானே?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x