

சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவரும் உத்தரப் பிரதேச கேபினட் அமைச்சருமான பிரஜாபதி, அமேதி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். அமைச்சர் பிரஜாபதி தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஒரு பெண் அளித்த புகாரின்பேரில் மாநில போலீஸார் அண்மையில் வழக்குப் பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து அமைச்சர் தலைமறைவானார்.
இந்நிலையில் அவர் வெளி நாட்டுக்குச் தப்பிச் செல்லாத வகையில் அவரது பாஸ்போர்ட் நேற்று முடக்கப்பட்டது. அனைத்து விமான நிலையங் களும் உஷார்படுத்தப் பட்டுள்ளன. அமைச்சர் பிரஜாபதி மற்றும் அவரது கூட்டாளிகள் 6 பேருக்கு எதிராக மாநில போலீஸார் நேற்று ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரன்ட் பிறப்பித்தனர்.