

கேரள சட்டப்பேரவையின் புதிய சபாநாயகராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஸ்ரீராமகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மொத்தம், 140 உறுப்பினர்கள் கொண்ட சட்டப்பேரவையில், ஸ்ரீராமகிருஷ்ணனுக்கு ஆதரவாக, 92 ஓட்டுகளும், ஐக்கிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் வி.பி.சஜீந்திரனுக்கு, 46 ஓட்டுகளும் கிடைத்தன. சட்டப்பேரவையில் நேற்று சபாநாயகர் தேர்தல் முடிந்த தும், முதல்வர் பினராயி விஜயன் மற்றும் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா ஆகியோர் ஒன்றாக இணைந்து, ஸ்ரீராமகிருஷ்ணனை சபாநாயகர் இருக்கைக்கு அழைத்துச் சென்று அமர வைத்தனர்.
இடதுசாரி ஜனநாயக முன்னணி வேட்பாளராக பொன்னனி தொகுதி யில் இருந்து சட்டப்பேரவை உறுப் பினரானவர் ஸ்ரீராமகிருஷ்ணன் (48). இவர், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினரும் ஆவார்.
பேரவையில் பாஜக சார்பில் உள்ள ஒரே உறுப்பினரான ராஜகோபால், ஸ்ரீராமகிருஷ்ண னுக்கு ஆதரவாக ஓட்டளித்தார். பாஜகவின் ஆதரவு தேவையில்லை என காங்கிரஸ் பகிரங்கமாக அறிவித்ததால் இம்முடிவை எடுத்த தாக, ராஜகோபால் குறிப்பிட்டார்.
எனினும், வருங்காலத்தில் பிரச்சினை அடிப்படையிலேயே அரசுக்கு தனது ஆதரவு அமையும் என அவர் சுட்டிக் காட்டினார். அதே போல், பேரவையில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியைச் சேர்ந்த உறுப்பினர்கள் 47 பேர் இருந்தபோதிலும், சஜீந்திரனுக்கு ஆதரவாக, 46 ஓட்டுகள் மட்டுமே கிடைத்தன.