

ரியோ ஒலிம்பிக்ஸில் பாட்மின்டன் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற சிந்து, காளஹஸ்தி சிவன் கோயிலில் நேற்று வழிபட்டார்.
வாயுத்தலமாக விளங்கும் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு நேற்று தனது பெற்றோருடன் வந்த சிந்து, ராகு-கேது சர்ப தோஷ நிவாரண பூஜை செய்தார். பின்னர் ஞானப்பூங்கோதை தாயார் மற்றும் காளத்திநாதரை அவர் தரிசித்தார்.
முன்னதாக கோயில் அதிகாரி கள் அவரை வரவேற்று தரிசன ஏற் பாடுகள் செய்தனர். பின்னர் தேவஸ் தானம் சார்பில் அவருக்கு பட்டு வஸ்திரம், பிரசாதங்கள் மற்றும் நினைவுப் படம் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து செய்தியாளர் களிடம் சிந்து கூறும்போது, “ரியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றால் இங்கு வருவதாக வேண்டிக்கொண்டேன். அதன்படி இங்கு வந்தேன். மேலும் பல பதக்கங்கள் வெல்ல வேண்டும் என வேண்டிக்கொண்டேன். இதற்கான உரிய முயற்சிகளையும், பயிற்சிகளையும் மேற்கொள்வேன்” என்றார்.