Published : 17 Jan 2017 09:47 AM
Last Updated : 17 Jan 2017 09:47 AM

கண்ணிவெடியை அகற்ற ஆளில்லா விமானம்: 14 வயது குஜராத் மாணவர் சாதனை

பூமியில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை பாதுகாப்பாக அகற்ற ஆளில்லா குட்டி விமானத்தை குஜராத்தைச் சேர்ந்த மாணவர் உருவாக்கியுள்ளார்.

உலகம் முழுவதும் கண்ணி வெடிகளை அகற்றும் பிரச்சினை மிகப்பெரும் சவாலாக உரு வெடுத்துள்ளது. தீவிரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த காஷ்மீர், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் கண்ணி வெடி தாக்குதலால் பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த ஏராளமான வீரர்கள் உயிரிழந்து வருகின்றனர்.

இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் குஜராத்தைச் சேர்ந்த 14 வயது மாணவர் கண்ணிவெடிகளை கண்டுபிடித்து அழிக்கும் ஆளில்லா குட்டி விமானத்தை உருவாக்கியுள்ளார்.

குஜராத்தின் அகமதாபாத் பாபு நகரைச் சேர்ந்தவர் ஆடிட்டர் பிரதியுமன்ஷ் ஜாலா. அவரது மனைவி நிஷா. இத்தம்பதியின் மகன் ஹர்ஷவர்தன் ஜாலா (14). அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். கண்ணி வெடியால் ராணுவ வீரர்கள் உயிரிழக்கும் செய்திகளைப் படித்த ஜாலா, அவர்களை காப்பாற்ற உறுதி பூண்டார். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தயாரான அதேவேளையில் ஓய்வுநேரத்தில் கண்ணிவெடிகளை அகற்றுவதற் கான ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.

சிறுவயது முதலே ஏரோநாட்டிக் கல் இன்ஜினீயரிங் துறையில் மிகுந்த ஈடுபாடு கொண்ட அவர், கண்ணிவெடிகளை அகற்றுவதற் காக 3 விதமான ஆளில்லா குட்டி விமானங்களை உருவாக்கியுள் ளார். இதில் 2 விமானங்களை தயாரிக்க அவரது தந்தை ரூ.2 லட்சம் வழங்கினார். மாணவரின் திறமையை அறிந்த மாநில அரசு ரூ.3 லட்சம் நிதியுதவியை அளித் தது. அதன் மூலம் மேம்படுத்தப்பட்ட 3-வது ஆளில்லா விமானத்தை ஜாலா உருவாக்கியுள்ளார்.

இதுகுறித்து ஹர்ஷவர்தன் ஜாலா கூறியதாவது:

முதலில் கண்ணிவெடிகளை அகற்றும் ரோபோக்களையே உரு வாக்கினேன். ஆனால் அவை திருப்திகரமாக இல்லை. எனவே எனது தந்தை மற்றும் மாநில அரசின் நிதியுதவியுடன் 3 ஆளில்லா விமானங்களை வடிவமைத்தேன்.

எனது விமானம் 2 அடி உயரத்தில் பறக்கும். கட்டுப்பாட்டு அறையில் இருந்து இதனை எளிதாக இயக்கலாம். ஒவ்வொரு விமானத்திலும் 21 மெகாபிக்சல் கொண்ட கேமராவை பொருத்தி யுள்ளேன். இதன்மூலம் தெளிவான புகைப்படம், வீடியோ எடுக்க முடியும். மேலும் லேசர் அலைகளை உமிழும் கருவிகளையும் பொருத்தியுள்ளேன்.

இதன்மூலம் சுமார் 8 சதுரஅடி பரப்பளவில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை துல்லியமாகக் கண்டுபிடிக்க முடியும். விமானத் தில் 50 கிராம் எடையிலான வெடிகுண்டுகளை எடுத்துச் செல்ல முடியும். கண்ணிவெடி புதைக்கப்பட்டுள்ள இடத்தின் மீது ஆளில்லா விமானம் வெடிகுண்டை வீசும். இதன்மூலம் கண்ணிவெடி செயலிழக்கச் செய்யப்படும்.

எனது தயாரிப்புகளை வர்த்தக ரீதியில் விற்பனை செய்வதற்காக ஏரோபட்டிக்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ளேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ரூ.5 கோடிக்கு ஒப்பந்தம்

ஹர்ஷவர்தன் ஜாலா தனது ஆளில்லா விமானத்தின் செயல் பாடு குறித்து அகமதாபாதில் அண்மையில் நடந்த சர்வதேச மாநாட்டில் செயல் விளக்கம் அளித்தார். அவரது கண்டுபிடிப்பு குறித்து முழு திருப்தி தெரிவித்த மாநில அரசு, ஜாலாவுடன் ரூ.5 கோடிக்கு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x