

நடப்பாண்டு ஹஜ் யாத்திரைக்கான 340 பயணிகள் அடங்கிய முதல் குழு ஜெட்டா நகரம் நோக்கி டெல்லியில் இருந்து நேற்று புறப்பட்டது.
டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று 340 பயணிகள் கொண்ட முதல் ஹஜ் பயணக் குழுவை வழியனுப்பி வைத்த பின், சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை (தனிப் பொறுப்பு) இணையமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறியதாவது:
“ஹஜ் குழுவினருக்கு பிரதமர் மோடியின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஹஜ் யாத்திரை என்பது முஸ்லிம் ஒவ் வொருவரின் வாழ்விலும் முக்கியமானது. அனைத்து ஹஜ் பயணி களும் நம் நாட்டின் அமைதி, வளம், நல்லிணக்கம், சகோதரத்துவம் மற்றும் உலக நன்மைக்காகவும் பிரார்த்திக்க வேண்டும்” என்றார்.
நடப்பாண்டுக்கு ஹஜ் வாரியம் மூலம் புனித யாத்திரைக்கு இந்தியா முழுக்க 21 இடங்களில் இருந்து ஒரு லட்சத்து 20 பேர் பயணிக்க உள்ளனர். இது தவிர, 36 ஆயிரம் பேர் தனிப் பட்ட முறையில் பயணம் மேற் கொள்கின்றனர்.