

எல்லையில் சண்டை நிறுத்த உடன்பாட்டை மீறி பாகிஸ்தான் இன்று 2 முறை தாக்குதல் நடத்தியது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ரஜவுரி, பூஞ்ச் ஆகிய மாவட்டங்களில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் அமைந்துள்ள ராணுவ நிலைகள் மற்றும் மக்கள் வசிக்கும் இடங்களை குறிவைத்து துப்பாக்கியால் சுட்டும் பீரங்கி குண்டுகளை வீசியும் இத்தாக்குதல் நடத்தப்பட்டது.
பிம்பர் காலி செக்டாரில் இன்று அதிகாலை 5 மணி முதல் 5.45 மணி வரையும், பின்னர் நவ்ஷெரா செக்டாரில் காலை 9.30 மணி முதற்கொண்டும் தாக்குதல் நடத்தப்பட்டதாக ராணுவ அதிகாரி ஒருவர் கூறினார்.
இந்த தாக்குதல்களுக்கு இந்தியத் தரப்பில் தகுந்த பதிலடி தரப்பட்டது என்றார் அவர்.