Published : 18 Mar 2017 03:57 PM
Last Updated : 18 Mar 2017 03:57 PM

உத்தராகண்ட் முதல்வராக திரிவேந்திர ராவத் பதவியேற்பு

உத்தராகண்ட் மாநில முதல்வராக ஆர்எஸ்எஸ் மற்றும் அமித் ஷாவுக்கு நெருக்கமான திரிவேந்திர சிங் ராவத் பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் கே.கே.பால் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக மூத்த தலைவர் உமா பாரதி, உத்தராகண்டில் வெளியேறும் முதல்வர் ஹரிஷ் ராவத், ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

உத்தராகண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 57 இடங்களை பாஜக கைப்பற்றியது. எனினும் முதல்வர் வேட்பாளரை அறிவிக்க பாஜக காலம் தாழ்த்தி வந்தது.

இந்நிலையில் பாஜக எம்எல்ஏக் களின் கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை தலைநகர் டேராடூனில் நடந்தது. அப்போது திரிவேந்திர சிங் ராவத் (56) கட்சியின் சட்டப்பேரவைத் தலைவராக ஒருமனதாக தேர்ந் தெடுக்கப்பட்டார். இதை தொடர்ந்து எம்எல்ஏக்கள் ஆளுநர் கே.கே.பாலை சந்தித்து திரிவேந்திர சிங்கை முதல்வராக தேர்ந்தெடுத்ததற்கான ஆதரவு கடிதத்தை வழங்கினர். பின்னர் திரிவேந்திர சிங் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

முன்னதாக செய்தியாளர் களுக்கு பேட்டியளித்த திரிவேந்திர சிங், ‘‘ஊழல் மற்றும் வறுமையை ஒழிக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் லட்சியத்தை அடைய நிச்சயம் பாடுபடுவேன். உத்தராகண்ட் உருவாகி 16 ஆண்டுகள் கடந்த பிறகும், பொதுமக்கள் அடிப்படை வசதிகள் இல்லாமல் திணறி வருகின்றனர். பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் சாலைகளின் நிலைமை மோசமாக உள்ளன. தவிர மாநிலத்தில் வேலைவாய்ப்பே இல்லை. இதனை சீர்செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். பாஜகவில் தனிநபர் எந்த முடிவை யும் எடுக்க முடியாது. எம்எல்ஏக் களின் ஒருமித்த சம்மதத்தின் பேரிலேயே அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கும் முடிவு எடுக்கப்படும்’’ என்றார்

உத்தராகண்டின் டோய்வாலா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திரிவேந்திர சிங் பிரதமர் மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவுக்கு நெருக்கமானவர். 2014 நாடாளுமன்ற தேர்தலின்போது, உ.பி.யில் பாஜகவின் வெற்றிக்காக அமித் ஷாவுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார்.

ஆரம்ப காலக்கட்டத்தில் ஆர்எஸ்எஸ்ஸின் பிரச்சாரகராகவும் பணியாற்றி இருக்கிறார். 2000-ம் ஆண்டில் உத்தரபிரதேசத்தில் இருந்து உத்தராகண்ட் பிரிக்கப்பட்டது. அப்போது உத்தராகண்ட் மாநில பாஜக பொது செயலாளராக பதவி வகித்தார். அமைச்சராகவும் பல ஆண்டுகள் பணி யாற்றிய அனுபவமிக்கவர். தற்போது மோடி அரசின் கனவு திட்டமான நமாமி கங்கே (தூய்மை கங்கை) திட்டத்தின் ஒருங்கிணைப் பாளராகவும், ஜார்க்கண்ட் மாநில பாஜக பொறுப்பாளராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x