திருப்பதி அருகே சாலை விபத்தில் 4 பேர் பலி

திருப்பதி அருகே சாலை விபத்தில் 4 பேர் பலி
Updated on
1 min read

திருப்பதி அருகே நேற்று காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டு விபத்துக்குள்ளானதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந் தனர்.

ஹைதராபாத்திலிருந்து திருப்பதி நோக்கி சென்று கொண் டிருந்த காரும், ரேணிகுண்டா வழியாக காளஹஸ்தி நோக்கி சென்ற லாரியும் வேதள்ள செருவு எனும் இடத்தில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணித்த ஹைதராபாத்தைச் சேர்ந்த கிஷன் (36), ஹனுமந்த் (37) ஓட்டுநர் பிரேம் குமார் (37) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

படுகாயமடைந்த 2 பேரில் ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

விபத்து காரணமாக திருப்பதி காளஹஸ்தி நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரம் வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ரேணிகுண்டா போலீஸார் வழக்குப் பதிந்து விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in