

நாடாளுமன்றத்தில் நடக்கும் காட்சிகளை பார்க்கும் போது தமது இதயத்தில் இருந்து ரத்தம் வழிந்தோடுவதாக உருக்கத்துடன் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
15-வது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கடைசி நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த 5-ஆம் தேதி தொடங்கியது. மீனவர் விவகாரம், தெலங்கானா எதிர்ப்பு கோஷம் என இன்று, தொடர்ந்து 6-வது நாளாக மக்களவை நாள் முழுவதும் முடங்கியுள்ளது.
கடும் அமளிக்கு மத்தியில் ரயில்வே இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. ரயில்வே அமைச்சர் பட்ஜெட் அறிக்கையை வாசிப்பது கூட கேட்காத அளவுக்கு எம்.பி.க்கள் கோஷம் எழுப்பினர்.
இந்நிலையில் இன்றைய அவை நடவடிக்கை பிரதமர் கூறுகையில், "நாடாளுமன்ற நடவடிக்கைகள் என் இதயத்தில் இருந்து ரத்தம் வழியச் செய்கிறது. அவையில் உறுப்பினர்கள் அமைதி காக்குமாறு பல முறை அறிவுறத்தப்பட்டும் உறுப்பினர்கள் அதை சற்றும் பொருட்படுத்தவில்லை. இது ஜனநாயகத்தின் துயரம்" என்றார்.