

ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்தத் துக்கு மத்திய அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம்(எப்ஐபிபி) மத்திய அமைச்சரவை குழுவின் முன் அனுமதியின்றி ஒப்புதல் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், என்.வி.ரமணா, டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் பாக நேற்று விசாரணைக்கு வந்தது.
வழக்கில் ஆஜரான பாஜக தலைவர் சுப்பிரமணிய சுவாமி, ‘ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தத்திற்கு கடந்த 2006-ம் ஆண்டு மத்திய அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம்(எப்ஐபிபி) ஒப்புதல் அளித்தது.
ரூ.3500 கோடி மதிப்புள்ள இந்த ஒப்பந்தத்திற்கு அப்போது நிதித்துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் விதிமீறல் என்று தெரிந்தே ஒப்புதல் அளித்துள்ளார். ரூ.600 கோடிக்கு அதிகமான அந்நிய முதலீடு எதுவாக இருந் தாலும், பொருளாதார விவகாரங் களுக்காக அமைக்கப்பட்டுள்ள அமைச்சரவைக் குழுவிடம் முன் அனுமதி பெற்ற பின்பே எப்ஐபிபி ஒப்புதல் வழங்க வேண்டும்’ என்று வாதிட்டார்.
அப்போது தலைமை நீதிபதி கேஹர், ‘மத்திய அமைச்சராக இருந்த சிதம்பரம் அப்போது இந்த விதிகளை தெரிந்துதான் ஒப்புதல் அளித்தார் என்பதற்கு உங்களிடம் என்ன ஆதாரம் இருக்கிறது?’ என்று கேள்வி எழுப்பினார். அதற்கு சுப்பிரமணிய சாமி, ‘மத்திய நிதியமைச்சராக உள்ள எவரும் இத்தகைய விதிமுறை இருப்பது எனக்கு தெரியாது என்று சொல்ல முடியாது. இந்த விவகாரம் இப்போது சிபிஐ விசாரணையில் இருந்து வருகிறது. கடந்த 2015-ம் ஆண்டு மூடி சீல் வைக்கப்பட்ட உறையில் ஆவணங்கள் சமர்ப்பிக் கப்பட்டுள்ளன. இதன்மீது என்ன முன்னேற்றம் என்பதை சிபிஐ தான் தெரிவிக்க வேண்டும்’ என்றார்.
அதற்கு நீதிபதிகள், ‘யாராக இருந்தாலும், எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப தயார். ஆனால், அதற்கு முன்பாக அவர் தெரிந்து தான் அனுமதி அளித்தார் என்பதை நிரூபிக்கும் வகையில் ஆவணங் களை சமர்ப்பிக்க வேண்டும்’ என்று தெரிவித்தனர். அதற்கு இரண்டு வாரம் அவகாசம் அளித்தனர். அதற் குள் ஆவணங்களைச் சமர்ப்பிப்ப தாக சுப்பிரமணிய சுவாமி ஒப்புக் கொண்டதையடுத்து வழக்கின் விசா ரணை இரண்டு வாரங்களுக்குப் பின்னர் ஒத்திவைக்கப்பட்டது.