திருமலையில் 7-ம் தேதி கருட சேவை: இருசக்கர வாகனங்களுக்கு அனுமதி மறுப்பு

திருமலையில் 7-ம் தேதி கருட சேவை: இருசக்கர வாகனங்களுக்கு அனுமதி மறுப்பு
Updated on
1 min read

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வரும் அக்டோபர் 3-ம் தேதி தொடங்கி 11-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதையொட்டி பக்தர்கள் வசதிக்காக பல்வேறு ஏற்பாடு களை திருமலை திருப்பதி தேவஸ்தானம் விரிவாக செய்து வருகிறது. குறிப்பாக 7-ம் தேதி நடைபெறும் கருட சேவையை காண நாடு முழுவதும் இருந்து லட்சக் கணக்கான பக்தர்கள் திருமலையில் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக அன்று ஒருநாள் மட்டும் மலைப் பாதையில் இருசக்கர வானகங் களுக்கு அனுமதி மறுக்கப் படுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி சாம்பசிவ ராவ் நேற்று தெரிவித்தார். மேலும் திருப்பதியில் இருந்து திருமலை வரை 3,500 முறை பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in