

நான்கு மாநில தேர்தல் வெற்றிக்கு நரேந்திர மோடியின் செல்வாக்கு தான் காரணம் என பாஜக தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
தேர்தல் முடிவுகள் குறித்து ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர் களை சந்தித்த ராஜ்நாத் சிங் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் கூறுகை யில், "பிரதமர் வேட்பாளராக அறிவிக் கப்பட்டுள்ள நரேந்திர மோடியின் செல்வாக்கு காரணமாக பாஜகவுக்கு பலன் கிடைத்துள்ளது" என்றார்.
மத்தியப் பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுகான் மீண்டும் முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுவாரா என்ற கேள்விக்கு, "தேர்தல் நடைபெற்ற மாநிலங்களில் சட்டப்பேரவை உறுப்பினர்களின் கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுப்பதை கண்காணிக்க குழு நியமிக்கப்பட்டுள்ளது" என்றார்.
பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவரும் டெல்லி மாநில தேர்தல் பொறுப்பாளருமான நிதின் கட்கரி கூறியதாவது:
காங்கிரசை ஆட்சியில் இருந்து நீக்க மக்கள் முடிவு செய்து, சோனியா மற்றும் ராகுலின் தலைமையை ஏற்க மறுப்பதாக தெரிவித்துள்ளார்கள். ராகுல் அலை எதுவும் வீசவில்லை. இந்த வெற்றி, பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை மக்கள் ஏற்றுக் கொண்டதைக் காட்டு கிறது. அவரது தீவிர பிரச்சாரம்தான் பாஜகவுக்கு வெற்றியை கொடுத்துள்ளது என்றார்.