Last Updated : 18 Aug, 2016 09:48 AM

 

Published : 18 Aug 2016 09:48 AM
Last Updated : 18 Aug 2016 09:48 AM

அரசுத் துறைகளுக்கு பணம் செலுத்தும்போது கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட்பேங்கிங் பரிவர்த்தனை கட்டணங்கள் ரத்து

ரூபாய் நோட்டுகளின் புழக்கத் தைக் குறைக்க, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் நெட் பேங்கிங் மூலமான பரிவர்த் தனையை ஊக்குவிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மற் றும் ஆன்லைன் பரிவர்த்தனை யின்போது வசூலிக்கப்படும் பரிவர்த்தனைக் கட்டணத்தை அரசே ஏற்கும் என அறிவிக்கப் பட்டுள்ளது.

தற்போது அரசுத் துறை களுக்கு வங்கிகளின் டெபிட், கிரெடிட் கார்டுகள் மூலமாக பணம் செலுத்தும் வாடிக்கை யாளர்கள்தான் பரிவர்த்தனைக் கட்டணத்தை ஏற்க வேண்டி யுள்ளது. இது வணிக தள்ளுபடி கட்டணம் (எம்டிஆர்) என்று அழைக்கப்படுகிறது.

இது தொடர்பாக அரசின் அனைத்துத் துறைகளுக்கும் உரிய வழிகாட்டுதல் அனுப்பப் பட்டுள்ளது. இதனால் எம்டிஆர் கட் டணம் அல்லது பிற வணிக பரிவர்த்தனைக் கட்டணத்தை வாடிக்கையாளர் ஏற்க வேண்டிய தில்லை என்று நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசுத் துறைகளுக்கு டெபிட், கிரெடிட் கார்டு மூலம் செலுத்தும் தொகைக்கு இனி பரிவர்த்தனை கட்டணம் கிடையாது. இந்த அறிக்கையின் நகல் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பரிவர்த் தனைக் கட்டணம் பிடித்தம் செய்யப்பட்டிருந்தால் அதை எவ்விதம் திரும்ப அளிப்பது என்பது குறித்த விரிவான வழிகாட்டுதலும் விரைவில் வெளியாகும். டெபிட், கிரெடிட் கார்டு தவிர இணைய தளம் மூலமான வங்கி பரிவர்த் தனை சார்ந்த விஷயங்களில் பரிவர்த்தனை கட்டணம் தொடர் பான விரிவான வழிகாட்டுதல் அடுத்தடுத்து வெளியாகும் என நிதி அமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலீடு மற்றும் பொது சொத்து மேலாண்மைத் துறையின் (டிஐபிஏஎம்) செயலர் நீரஜ் குப்தா தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.

இக்குழு வங்கி அட்டைகள் மற்றும் இணையதள பரிவர்த்தனை சார்ந்த விஷயங்களை ஆராய்ந்ததில் அரசுத் துறை களுக்கு பொதுமக்கள் கிரெடிட், டெபிட் கார்டு மூலம் பணம் செலுத் துவதில் உள்ள பிரச்சினைகளை சுட்டிக் காட்டியிருந்தது. இதைய டுத்தே இந்த அறிவிப்பை நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

2012-ம் ஆண்டு ரிசர்வ் வங்கி வெளியிட்ட வழிகாட்டுதலின்படி டெபிட் கார்டு மூலம் ரூ.2 ஆயிரத் துக்கும் குறைவான பரிவர்த் தனைக்கு எம்டிஆர் கட்டணமாக 0.75 சதவீதம் பிடித்தம் செய்ய அறிவுறுத்தியது. ரூ.2 ஆயிரத் துக்கும் மேலான பரிவர்த்தனைக்கு ஒரு சதவீதத்தை பிடித்தம் செய்ய அறிவுறுத்தியது. ஆனால் கிரெடிட் கார்டு மூலமான பரிவர்த் தனைக்கு உச்ச வரம்பு நிர்ணயிக் கப்படவில்லை.

பணப் பரிவர்த்தனை குறைந்த நாடாக உருவாக்கும் முயற்சியில், அனைத்து வங்கி அட்டைகளும் ஏற்கும் வகையிலான கட்ட மமைப்பு வசதியை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்க ரிசர்வ் வங்கி வசதி செய்திருந்தது.

2015-ம் ஆண்டு அக்டோபர் மாத நிலவரப்படி 61.5 கோடி டெபிட் கார்டு பயன்படுத்துவோரும் 2.3 கோடி கிரெடிட் கார்டு பயன் படுத்து வோரும் இந்தியாவில் உள்ளதாக தெரியவந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x