

இந்தியாவின் அடுத்த பிரதமர் 3வது அணியில் இருந்தே வருவார் என சமஜ்வாதி கட்சித்தலைவர் முலாயம் சிங் யாதவ் கூறியுள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்த அவர்: 2014 லோக்சபா தேர்தல்கள் முடியும் முன்னர் 3வது அணி அமைவதற்கான சாத்தியம் இல்லை. வேட்பாளர்களுக்கான சீட்டு ஒதுக்குவதில் குழப்பம் ஏற்படும் என்பதால் லோக்சபா தேர்தலுக்குப் பின்னரே 3வது அணி அமையும் என்றார்.
3வது அணியின் பிரதமர் வேட்பாளர் யாராக இருப்பார் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு: இதுவரை பா.ஜ.க., மட்டுமே தேர்தல் வேட்பாளரை அறிவித்துள்ளது. எனவே பிரதமர் வேட்பாளர் குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என பதிலளித்தார்.
மேலும், 3வது அணி அமைப்பது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலர் பிரகாஷ் கராத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலர் ஏ.பி.பரதன் ஆகியோருடன் தான் தொடர்ந்து ஆலோசித்து வருவதாகவும் முலாயம் சிங் கூறியுள்ளார்.