ம.பி.யில் கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினரை சந்திக்க வந்த ராகுலை தடுத்து கைது செய்தது போலீஸ்

ம.பி.யில் கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினரை சந்திக்க வந்த ராகுலை தடுத்து கைது செய்தது போலீஸ்
Updated on
2 min read

மத்திய பிரதேசத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினரைச் சந்திப்பதற்காக வந்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை, எல்லையிலேயே தடுத்து போலீஸார் கைது செய்தனர். இதற்கு காங்கிரஸார் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, விவசாயிகளின் குடும் பத்தினரைச் சந்திக்க அவர் அனுமதிக்கப்பட்டார்.

மத்திய பிரதேசத்தில் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தி யதில் 5 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து மான்ட்சர், நீமச், உஜ்ஜைனி உள்ளி்ட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது.

கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, நேற்று மான்ட்சர் வருவதாகக் கூறப்பட்டது. இதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி தரவில்லை. ஆனாலும் நேற்று ராகுல் திட்டமிட்டபடி மான்ட்சர் வருவதாக அறிவிக்கப்பட்டது.

இதனால் மாநில எல்லையான நயாகான் பகுதியில் புதிதாக சோதனைச் சாவடிகளும், அங்கு ஏராளமான போலீஸாரும் குவிக்கப்பட்டனர். ராஜஸ்தான் மாநிலம் உதய்பூருக்கு வந்த ராகுல் காந்தியுடன், அம்மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் மற்றும் மூத்த தலைவர்கள் திக்விஜய் சிங், கமல்நாத் உள்ளிட்டோரும் உடன் வந்தனர். தொண்டர்கள் படையுடன் மத்திய பிரதேச மாநிலத்துக்கு ராகுல் காரில் வந்தார்.

காருக்கு முன்னால் 150-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங் களில் காங்கிரஸ் தொண்டர்கள் பேரணியாக வந்தனர். மத்திய பிரதேச எல்லைக்கு முன்பாக 100 மீட்டர் தொலைவில் தொண் டர்களுடன் ராகுல் காந்தி சாலையில் நடந்து வந்தார். எல்லையை அடைந்ததும் ராகுல் காந்தியை போலீஸார் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் இருதரப்புக்கும் தள்ளுமுள்ளு, வாக்குவாதம் ஏற்பட்டது.

போலீஸ் தடையை மீறி முன்னேறிச் செல்ல முயன்ற ராகுல் காந்தி, கமல் நாத், திக்விஜய் சிங் உள்ளிட்ட அனைவரையும் போலீஸார் கைது செய்து, அப்பகுதியில் உள்ள சிமென்ட் நிறுவனத்துக்குச் சொந்தமான விருந்தினர் இல்லத்தில் அடைத்து வைத்தனர்.

அங்கு செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல், ‘கோடீஸ்வர்கள் வாங்கிய கடன் ரூ.1.50 லட்சம் கோடியை பிரதமர் மோடி தள்ளுபடி செய்வாரே தவிர விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்ய மாட்டார். அதேபோல் விவசாய உற்பத்தி பொருட்களுக்கும் உரிய விலை, இழப்பீடு மற்றும் ஊக்கத் தொகை போன்றவற்றையும் அவர் தராமாட்டார். ஆனால், அவர்களுக்கு அவர் துப்பாக்கி தோட்டாக்களையும் மட்டும் கொடுக்க முடியும்’ என்றார்.

இந்நிலையில், கைது செய்யப் பட்ட ராகுல் காந்தி உள்ளிட்ட 250 பேரை 4 மணி நேரத்துக்குப் பிறகு போலீஸார் விடுவித்தனர். மேலும், கொல்லப்பட்ட விவசாயி களின் குடும்பத்தினரைச் சந்திக்க வும் ராகுலுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இதற்கிடையே, மான்ட்சர் மாவட்ட ஆட்சியர் எஸ்.கே.சிங் மாற்றப்பட்டு, புதிய ஆட்சியராக ஓ.பி.வஸ்தா நியமிக்கப்பட்டுள் ளார். அதேபோல் போலீஸ் அதிகாரி களும் மாற்றப்பட்டுள்ளனர். வன் முறை தொடர்பாக 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதுதொடர் பாக 62 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in