ஜனவரி 1-ல் வைகுண்ட ஏகாதசி வருவதால் சர்வ தரிசனத்துக்கு மட்டும் அனுமதி: அனைத்து சேவைகள், முன்பதிவு ரத்து

ஜனவரி 1-ல் வைகுண்ட ஏகாதசி வருவதால் சர்வ தரிசனத்துக்கு மட்டும் அனுமதி: அனைத்து சேவைகள், முன்பதிவு ரத்து
Updated on
1 min read

வரும் புத்தாண்டு ஜனவரி 1-ம் தேதியே வைகுண்ட ஏகாதசியும் வருவதால், திருப்பதி ஏழுமலை யான் கோயிலில் அன்றைய தினம் பக்தர்கள் அனைவரும் சர்வ தரிசனத்தில் மட்டுமே தரிசிக்க அனுமதிக்கப்பட உள்ளனர்.

திருமலையில் உள்ள அன்ன மய்யா பவனில் தொலைபேசி மூலம் பக்தர்களின் குறைகளை கேட்டறியும் நிகழ்ச்சியில் பக்தர் களின் கேள்விகளுக்கு தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி எம்.ஜி. கோபால் அளித்த பதில்.

பக்தர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, ரூ. 50 சுதர்சன கட்டணத் தில் சாமி தரிசனம் செய்பவர்களுக் காக நீண்ட வரிசையை குறைத்துள் ளோம். இனி இவர்களும் விரைவில் சாமியை தரிசிக்கலாம். வேற்று மத பிரச்சாரங்கள் போன்றவற்றை இண்டெர்நெட் மூலம் சமூக வலைதளங்களில் வெளியிடுவதைத் தடுக்க தேவஸ்தானம் புதிய முறையை விரைவில் கையாள உள்ளது.

வரும் ஜனவரி 1-ம் தேதியே வைகுண்ட ஏகாதசி வருவதால், அன்றைய தினம் அனைத்து ஆர்ஜித சேவைகளையும் தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. மேலும் தரிசனம், சேவைகள், தங்கும் அறை களுக்கான முன்பதிவும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் அனைத்து பக்தர்களும் சர்வ தரிசனத்தில் மட்டுமே அனுமதிக் கப்பட உள்ளனர். இதன் மூலம் கூடுதலாக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமியை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும்.

மேலும் தேவஸ்தானம் சார்பில், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவம் வரும் 19-ம் தேதி தொடங்கி 27-ம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் நாளை முதல் 11-ம் தேதி வரை திருப்பதியில் உள்ள கபிலேஸ்வரர் கோயிலில் லட்ச தீப அர்ச்சனையும் நடைபெற உள்ளது என கோபால் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in