

ஐ.நா பொது சபை கூட்டத்தில் இன்று உரையாற்றவுள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், தீவிரவாத நாடாக பாகிஸ்தானை அறிவிக்கக் கோரி உலக நாடுகளிடம் ஆதரவு திரட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
காஷ்மீரின் உரியில் ராணுவ தலைமையகத்துக்குள் புகுந்து பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்கு தல் நடத்தியதில் 18 வீரர்கள் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக சர்வதேச அளவில் கண்டன குரல்கள் ஒலிக்க தொடங்கியுள்ளன.
கேரள மாநிலம் கோழிக்கோட் டில் நேற்று முன்தினம் நடந்த பொதுக்கூட்டத்தின் போது உரி தாக்குதல் விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி முதல் முறையாக மவுனம் கலைத்தார். அப்போது ‘‘தீவிரவாதத்தை ஏற்று மதி செய்யும் நாடாக உருவாகி நிற்கும் பாகிஸ்தானை சர்வதேச அரங்கில் தனிமைப்படுத்துவதற் கான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இன்று நடக்க வுள்ள ஐ.நா. பொது சபை கூட்டத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், பாகிஸ்தானை தீவிரவாத நாடாக அறிவிக்கக் கோரி உலக நாடுகளிடம் ஆதரவு திரட்டும் வகையில் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பாகிஸ்தானை தனிமைப்படுத்த வேண்டும் என்ற மோடியின் கருத்தையும் வலுவாக பதிவு செய்வார்.