அமர்நாத் புனித யாத்திரை 2-வது குழு புறப்பட்டது

அமர்நாத் புனித யாத்திரை 2-வது குழு புறப்பட்டது
Updated on
1 min read

அமர்நாத் புனித யாத்திரை 2-வது குழுவினர் ஜம்முவில் இருந்து நேற்று தங்களது பயணத்தை தொடங்கினர். இந்த குழுவில் 1871 யாத்ரிகர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இமயமலையில் 3888 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள அமர்நாத் குகை கோயிலில் ஆண்டுதோறும் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பனிலிங்க வடிவில் சிவபெருமான் அருள்பாலிப்பார். சுவாமியை வழிபட உலகம் முழுவதும் இருந்து அமர்நாத் யாத்திரைக்கு பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.

அதன்படி அமர்நாத் யாத்திரையின் முதல் குழுவினர் கடந்த 1-ம் தேதி ஜம்முவில் இருந்து தங்களது பயணத்தை தொடங்கினர். தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக இந்த யாத்திரைக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த சனிக்கிழமை பனிலிங்கத்தை வழிபட்டார்.

இதைத் தொடர்ந்து 2-வது குழுவில் 1871 பக்தர்கள் ஜம்முவில் இருந்து நேற்று தங்களது புனித பயணத்தைத் தொடங்கினர். இதில் 1505 ஆண்கள், 366 பேர் பெண்கள் இடம்பெற்றுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in