

இந்திய எல்லையில் சீனா அடிக்கடி ஊடுருவுவது இரு தரப்பு உறவை பாதிக்கும் என்று காஷ்மீரில் தேர்தல் பிரசார கூட்டத்தில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார்.
காஷ்மீரில் வரும் 25-ம் தேதி தொடங்கி 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதை முன் னிட்டு காஷ்மீர் மாநிலம் லே பகுதியில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் ராஜ்நாத் சிங் பேசியது: காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதால் மத்திய அரசால் நேரடியாக சில சிறப்புத் திட்டங்களை காஷ்மீரில் அமல் படுத்த முடியவில்லை. பாஜக வுக்கு மக்கள் வாக்களிப்பதன் மூலம் மாநிலத்தில் 73-வது அரசியல்சாசன சட்டத் திருத் தத்தை கொண்டு வர முடியும்.
அக்சய் சின் பகுதியை சீனா சட்டவிரோதமாக ஆக்கிரமித் துள்ளது. சீனா அடிக்கடி இந்திய எல்லைக்குள் ஊடுருவுவது இருநாட்டு உறவுக்கு நல்ல தல்ல. அனைத்து அண்டை நாடுகளுடனும் நல்லுறவை பேண இந்தியா விரும்புகிறது.
அக்சய் சின் பகுதியை பாகிஸ்தான் சீனாவுக்கு அளித்தது. அப்போது காஷ்மீரில் இருந்த அரசும் அதனை கண்டு கொள்ளவில்லை. மத்திய அரசு அப்பகுதியை வெறும் பனிப் பாலைவனம் என்று கூறியது. இந்தியா சுதந்திரமடைந்தபோது சீனாவின் எல்லை ஜம்மு-காஷ்மீர் பகுதியில் இல்லை. ஆனால் இப்போது காஷ்மீர் வரை சீன எல்லை விரிவடைந்ததற்கு மத்தி யில் முன்பு ஆட்சியில் இருந்த காங்கிரஸ்தான் காரணம். அவர் களின் தவறான கொள்கைகளால் இந்தியா பல இடங்களை சீனா விடம் இழந்தது என்று ராஜ்நாத் சிங் பேசினார்.