Published : 14 Sep 2016 07:56 AM
Last Updated : 14 Sep 2016 07:56 AM

நிலம், நீர், மொழியைவிட மனிதாபிமானமே முக்கியம்: சித்தராமையா உருக்கமான வேண்டுகோள்

காவிரி பிரச்சினை காரணமாக கர்நாடகாவில் வன்முறை வெடித் துள்ள நிலையில், முதல்வர் சித்தராமையா மக்கள் அமைதி காக்க வேண்டி வீடியோ மூலம் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது: காவிரி விவகாரத்தில் கர்நாட காவுக்கு அடுத்தடுத்து அநியாயம் இழைக்கப்படுவதால் கன்னடர்கள் ஆதங்கத்தில் இருப்பது இயல் பானதுதான். ஆனால் எந்த பிரச் சினைக்கும் வன்முறை தீர்வாக முடியாது. பொதுச்சொத்துக்களை சேதப்படுத்துவதை ஏற்க முடியாது. தமிழகத்தில் கன்னடர்கள் தாக்கப் படுவது கண்டிக்கத்தக்கது. அதே போல கர்நாடகாவில் தமிழர் களும், அவர்களின் உடைமைக ளும் தாக்கப்படுவதும் கண்டிக்கத் தக்கதே.

நிலம், நீர், மொழி ஆகிய விவகாரங்களில் கன்னடர்கள் மிகுந்த உணர்ச்சிவசப்பட்டவர் களாக இருந்தாலும் மிகவும் முக்கியமான மனிதாபிமானத்தை மறந்துவிடக்கூடாது. அனைவரும் அமைதியை நிலைநாட்ட உதவ வேண்டும். இரு மாநில மக்களும், வன்முறையைக் கைவிட வேண் டும். இங்கு தமிழர்கள் மட்டுமல் லாமல் பிற மாநில மக்களும் அதிகளவில் வசிக்கிறார்கள். எனவே அனைவரின் பாதுகாப்பை யும் உறுதிப்படுத்த வேண்டும்.

ஊடகங்களுக்கு வேண்டுகோள்

பெங்களூரு கர்நாடக நகரம் மட்டுமல்ல, இது சர்வதேச நகரம். இந்த நகரத்துக்கு சர்வதேச அளவில் ஒரு மதிப்பு உள்ளது. இந்தியாவின் சிலிகான் வேலியாக திகழ்கிறது. எனவே இந்த நற்பெயரை கெடுக்கும் வன்முறை சம்பவங்களை அனுமதிக்க முடியாது. இரு மாநில ஊடகங்களும் பொறுப்பு டன் செய்தியை வெளியிட வேண் டும். வன்முறையைத் தூண்டும் வகையில் செய்தி வெளியிட கூடாது. வதந்திகளை பரப்பக் கூடாது. இவ்வாறு கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x