Last Updated : 22 May, 2017 09:46 AM

 

Published : 22 May 2017 09:46 AM
Last Updated : 22 May 2017 09:46 AM

இன்னும் 8 ஆண்டுகளில் இந்தியாவில் 2,305 சதுர கி.மீ. காடுகள் காணாமல் போகும் - இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆய்வில் தகவல்

வரும் 2025-ம் ஆண்டுக்குள் இந்தியா, 2,305 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிலான வனப் பகுதிகளை இழக்கும் என, இஸ்ரோ விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

குறிப்பாக இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள், அந்த மான் நிக்கோபார் தீவுகள் உள்ளிட்ட இடங்களில் இந்த பாதிப்பு அதிகமாக இருக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. நிலப் பரப்பு மாற்றத்தை அறிவதற்கான மென்பொருளைப் பயன்படுத்தி இஸ்ரோ விஞ்ஞானிகள் காடு களின் பரப்பளவு பற்றி ஆய்வு நடத்தினர்.

இதில், இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களான அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோராம், நாகாலாந்து, திரிபுரா மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவு உள்ளிட்ட இடங்களில் கடந்த 2005 முதல் 2013-ம் ஆண்டு வரை காடுகளை அழிக்கும் நடவடிக்கை கள் 0.3 சதவீதத்துக்கும் அதிக மாக இருந்துள்ளதாகக் கூறப்பட் டுள்ளது.

மேலும், கடந்த 1880-ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக் கெடுப்பின்படி 10.42 லட்சம் சதுர கிலோ மீட்டராக காடுகளின் பரப்பளவு இருந்துள்ளது. இது 31.7 சதவீதம் ஆகும். இது 2013-ம் ஆண்டு அதாவது கடந்த 133 ஆண்டுகளில் 40 சதவீதம் பரப்பளவு காடுகள் அழிக்கப் பட்டுள்ளன.

குறிப்பாக வடகிழக்கு மாநிலங் களில் பெரும்பாலான வனப் பகுதிகள் தனியாரிடம் இருப்பதும், வனப்பகுதிகள் அழிக்கப்பட்டு, சாகுபடி பரப்பளவாக மாற்றப்பட்டு வருவதும் காடுகளின் அழிப்புக்கு முக்கியக் காரணங்களாக முன் வைக்கப்படுகின்றன. முக்கிய மாக, வனப்பகுதிகளில் பெரும் பாலான பாதுகாக்கப்பட்ட இடங் கள் மூலம் காடுகள் அழிப்பு குறைந்து வருவதும் தெரிய வந்துள்ளது.

காடுகளை அழிவில் இருந்து மீட்கும் நடவடிக்கையில் இறங்க இந்த ஆய்வு உதவிகரமாக இருக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x